பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 27. தவம்

உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை

அற்றே தவத்திற்கு உரு.

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்,அதனை அஃதிலார் மேற்கொள் வது.

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும்.

வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்.

தவம்செய்வார் தங்கருமம் செய்வார் மற்றல்லார் அவம்செய்வார் ஆசையுட் பட்டு.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும்.

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர்.

267

262

263

264

265

266

267

268

269

270