பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று.

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல்.

நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும் வாள்.அது உணர்வார்ப் பெறின்.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருது. கோடியும் அல்ல பல

குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே உடம்போடு உயிரிடை நட்பு.

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு

4. திரு-எண்டு

34. நிலையாமை

331

332

333

334

335

336

337

338

339

340