பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் - ஊழ் இயல் 80

ஆவதற்குரிய ஊழ் வந்தால் சோர்வில்லாத முயற்சிகள் தோன்றும் கைப்பொருள் போவதற்குரிய ஊழ் வந்தால் சோம்பல் தோன்றும் 371 இழப்பதற்கான ஊழ் ஒருவனைப் பேதையாக்கும்; ஆவதற்கான ஊழ் வந்தால் ஒருவனது அறிவை விரிவாக்கி அவனுக்குப் பல நன்மைகளைத் தரும். 372 நுண்மையான நூல்கள் பலவற்றை முயன்று கற்றாலும், ஊழின் நிலைமைக்குத் தகுந்தபடி உள்ளதாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும். 373 ஊழின் காரணத்தால் உலகத்து இயற்கையானது இருவேறு வகைப்படும்; செல்வராதல் வேறு ஊழ், தெளிவான அறிவினராதல் வேறு ஊழ் ஆகும். 374 செல்வம் தேடும் முயற்சிக்கு, நல்லூழால் தீயவும் நல்லவை யாவதும், தீயூழால் நல்லவைகளும் தீயவை தருகின்ற தன்மையவாதலும் உண்டு. 375 வருந்திக் காப்பாற்ற முயன்றாலும் நல்லூழ் இல்லாதபோது எதுவுமே ஆகாது; கொண்டுபோய் வெளியே சொரிந்தாலும் நல்லூழிருந்தால் நம் பொருள் போகாது. 376 ஊழை வகுத்தவன் வகுத்துவிட்ட வகைப்படி அல்லாமல், கோடியாகப் பொருள் தொகுத்தவர்க்கும் அவற்றைத் துய்த்தல் என்பது அரிதாகும். 377 வந்தடைவதான இன்பங்கள் வந்து சேராமற் போகுமானால், துய்க்கும் பொருள் இல்லாதவர்கள் தம்முடைய ஆசைகளைத் துறப்பார்கள்! 378 ஊழால் தன்மைகள் விளையும்போது, அவற்றை நல்லவையாகக் காண்பவர்கள், அஃது இல்லாத கேடு காலத்தில் துன்பப்படுவதுதான் எதற்காக? 379 ஊழைக் காட்டிலும் பெரிதும் வலிமையானவை யாவை உள்ளன மற்றொன்றை வலியது என்று கருதினாலும், அங்கும் ஊழே முன்வந்து நிற்கும்! 380