பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii இரண்டு தலைமுறையினருக்கு திருக்குறள் அறிவை எடுத்துச் சொல்லிய ஆசான் ஐயா திருக்குறளார் அவர்கள். சொல்லில் சுவை, பேச்சில் நயம், இவைகளோடு தம் அனுபவ அறிவை நகைச்சுவையாக வழங்குவதில் மாமன்னர். படித்தவரானாலும், பாமரனானாலும் ஐயா அவர்கள் சொல்லும் வகையில் ஈர்க்கப்பட்டு திருக்குறளைத் தொடர்ந்து படித்துப் படித்து அறிவை வளர்த்துக் கொள் கின்றனர். ஆண்கள், பெண்கள் இருபாலாருக்கும் தக்க உதாரணங்களுடன் திருக்குறளின் துண்ணிய கருத்தினை மிக எளிதாக விளங்க வைக்கும் வித்தகர். இந்த நூற்றாண்டின் தலைசிறந்த திருக்குறள் நெறி பரப்பும் செம்மல், தமிழ்நாடு செய்த தவப்பலத்தினால் அய்யா இங்கு அவதரித்து அனைவரையும் ஆட்கொண்டு விட்டார்கள். ༡༡་་་ 2: அய்யாவின் ஒவ்வொரு சொல்லும் அனுபவ அறிவைச் சிதறும். அய்யாவின் கருத்துகள் காலமெல்லாம் நிலைத்து நிற்கும். உலகின் பொதுமறை திருக்குறள் என்பதைஅய்யா வின் ஒரு சொற்பொழிவைக் கேட்டால் நன்றாக விளங்கி விடும். அய்யா ஒர் அறிவுச் சுரங்கம். வருங்கால இளைஞர் களுக்கு நல்வழிகாட்டும் அவர் சொற்பொழிவுகள். பல வம்சக்கணக்கான மக்கள் அய்யாவின் சொற்பொழிவைக் கேட்டுப் பண்பட்ட மனிதர்களானார்கள்.