பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 களைச் செய்தல் கூடாது என்பதனை முதலிரண்டு பாடல்கள் கூறுகின்றன. - மூன்று முதல் ஏழாம் பாடல் வரை, மக்கள் காணு வதற்கு முடியாதபடி இருப்பதும், கடுமையான முகத்தை யுடையவனாக இருப்பதும், கண்ணோட்டம் இல்லாதிருப்ப தும், கடுமையான சொற்கள் சொல்லுவதும், அளவுக்கு மீறிய தண்டனை கொடுப்பதும் என்று குடிமக்கள் அஞ்சும் வினை களைச் செய்தல் கூடாது என்பதும், செய்தால் அவன் ஆயுளும், வீரமும் செல்வமும் இழப்பான் என்பதனையும் கூறுகின்றன. எட்டாம் குறட்பா பகுதி என்று கூறப்படும் அமைச்சர் முதலாயினோர் அஞ்சும் செயல்களைச் செய்தல் கூடாதென்றும் செய்தால் வரும் குற்றத்தினையும் சுட்டிக் 'காட்டுகிறது. ஒன்பதாம் பாடல்தான் அஞ்சும் வினையினை யும் அது செய்தால் அடையும் பயனையும் கூறும். பத்தாம் பாடல் வெருவந்த செய்தலின் குற்றத்தினைக் குறித்துக் காட்டியதாகும். முதற்குறட்பா, தகுதி என ஒன்று நன்றே என்று நடுவு நிலைமை அதிகாரத்தில் கூறப்படும் குறட்பாவுடன் ஒப்பிட்டுப் பார்த்தற்குரியதாகும். குற்றம் செய்வார் குற்றத் தினைக் கண்டு அஞ்சுதற் பொருட்டும், யாவரும் அஞ்சி நடுங்காதிருக்கும் பொருட்டும், கடிது ஒச்சி' என்று இரண் டாம் பாடல் கூறுகின்றது. வெருவந்த செய்து நடந்துகொள் ளுபவனுடைய செல்வம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாது என்பதைக் குறிக்க வேண்டி ‘பேய் கண்டன்ன துடைத்து" என்று ஐந்தாம் பாடல் கூறும். உலக வழக்கில் அமைத்துக் கூறவேண்டி, பேய்" என்றார். - . . . ஏழாம் பாடல் அவனுடைய சேனையும் கெடும் என்று குறிப்பால் உணர்த்திற்று. அடுமுரண்' என்பது பகையினை வெல்லுவதாகிய சேனை. எனவே பலம் வாய்ந்ததனால் 'இரும்பினைத் தேய்க்கும் அரம்' என்றார். சிந்திக்க வேண்டியதாகும், மக்கள் மனம் நொந்து சொல்லுகின்ற

  • .*.