பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 ாைடல், பாடும் பாடலினையும் கண்ணோட்டத்தினையும், ஒப்பிட்டுக் காட்டிச் சிறப்புடன் அமைந்துள்ளது. கண்ணிற்கு அணிகலம், இதுதான் என்பதனை ஐந்தாம் பாடல் எடுத்துக் காட்டுகிறது. கண்ணோட்டமில்லாத வர்கள், மரத்திற்கு ஒப்பர் என்று கூறி இழிவுபடுத்திச் கூறுகிறது ஆறாம் குறட்பாவாகும். கண்ணோட்டம் இல்லாதவர்கள் கண்ணுடையவர்கள் அல்லர் என்றே கூறி குறிப்பாக உணர்த்துகிறது. ஏழாவது குறட்பா எட்டாவது குறட்பா உரிமை உடைத்து இவ்வுலகு என்று கூறி கண்ணோட்டம் செய்பவரது உயர்ச்சியினைத் தெளிவு படுத்தி விடுகிறது. பத்தாம் குறட்பா மிகவும் ஆழ்ந்த உண்மையினை நயம் உணர்த்துகிறது. கண்ணோட்டம் என்பதனை سlلتگاه “நாகரிகம்" என்ற சொல் குறிக்கின்றது. திருக்குறளில் இந்த ஒரு குறட்பாவில்தான் நாகரிகம்" என்ற சொல் காணப் படுகிறது. நஞ்சு உண்டு அமைவர்" என்று கூறினார். நஞ்சு என்பது உயிரைப் போக்குவது என்ற பொருளில் கூறப் பட்டது அல்ல; மிகவும் கொடிய துன்பத்தினை உண்டாக்கு வது என்பதே பொருளாகும். காரிகை, பண், அணிகலம், மண், மரம், உரிமை, நஞ்சு, நாகரிகம் முதலிய சொற்கள் சிறந்த கருத்துக்களை நினைவு படுத்துவனவாக உள்ளன. 59. ஒற்றாடல் அதாவது, நண்பர், பகைவர், இருவகையிலும் அல்லா தார் என்னும் முத்திறத்தாரிடமும் நிகழ்வனவற்றை அறிதற்கு ஒற்றரை ஆளுதல் என்பதாகும். ஆட்சி செலுத்து வோர்க்கு மிகவும் இன்றியமையாத பகுதி ஒற்றர்களாகும்.