பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 போலக் காணப்பட்டாலும் ஊக்கமில்லாததால் மக்களாகக் கருதப்படார் என்று கூறினார். உறுப் பொத்தன் மக்கள் ஒப்பு அன்றால்” இல்லாதிருத்தலாகும். ஊக்கமுடையவர் களுக்கும் ஒரோவழி குணவயத்தான் மடிவருதலும் உண்டு, அதனை வராதபடி பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். முதல் நான்கு பாடல்களும் மடியின் தீமையினைக் கூறுகின்றன. ஐந்து முதல் எட்டாம் பாடல் வரை மடியினால் வரும் குற்றங்கள் கூறப்பட்டன. கடைசி இரண்டு பாடல்களும் மடிமை இல்லாதவன் அடையும் பயனைத் தெளிவுபடுத்து ஆகின்றன. தான்பிறந்த குடியைக் குன்றாவிளக்கம் என்று முதற் குறட்பா கூறும். உலகநடை உள்ளளவும் இடையறாது தன் ஆணுடன் பிறந்தாரை விளக்குதலால் குடி குன்றாவிளக்கம் என்று குறிக்கப்பட்டது. தாமத குணத்தால் உண்டாவதால் "மடி மாசு என்று கூறப்பட்டது. மாசு ஊர மாய்ந்து கெடும்-குடிமடியும் தன்னினும் முந்து-குடிமடிந்து குற்றம் பெருகும்-கெடு நீரார் என்ற குறட்பாவும், மக்களே போல்வர்' என்ற குறட்பாவும் சிந்தனைக்குரியன. ஐந்தாம் பாடலில், மலர் என்றது, மலரின் தாளினையாகும். நீர் மிகுந்திருந்தால் மலரின் தாளும் நீண்டிருக்கும் என்பதாகும். எத்தகைய துன்பத்தினையும் தாங்கிப் பெருமையுடன் நிற்பது யானையின் குணமாகும், இதுவே ஏழாம் பாடல் கூறுவதாகும். புலி, யானையினை ஒப்பிடும் போது மிகச் சிறிய உருவம் உள்ளதாக இருந்தாலும் ஊக்கம் அதற்கு வலிமையினைத் தந்துவிட்டது என்று ஒன்பதாம் பாடல் கூறுகிறது. உள்ளத்தின் உறுதிப்பாட்டைக் கூறும்போது எழாம் பாடல் களிறு என்றும், உருவத்தினைக் காட்டும் போது ஒன்பதாம் பாடல் யானை என்றும் குறித்தன.