பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮽ$ 61. மடிஇன்மை தொழிற் செய்யுங்கால் சோம்புதல்; காமக்கலன்மாண்பயன் எய்தல் அரிது-இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர்-அடிமை புகுத்திவிடும்-என்று கூறப்பட்டன வெல்லாம், சோம்பல் என்னும் மடியினையும், அதனை உடையவனையும் விளக்கம் செய்கின்றன. மிகவும் :கொடிய மடியென்பதாகும். அதனையுடையவன் மிகவும் இழிந்த நிலையினை அடைவான். குடிமை" குடிசெயல் வகை ஆகிய அதிகாரங்களும் இங்கு சிந்திக்கத் தக்கன. நெருப்பை நெருப்பாகவே கருதுக' என்று கூறுவது போல, மடியினை விட தீயது வேறெதுவும் இல்லையாத லால், அப்பெயரையே வைத்து, மடியை மடியா ஒழுகல்" என்று இரண்டாம் பாடல் கூறுகின்றது. மடி என்பது அழிவினைத் தருவது. அதனை மனதில் வைத்து நடக்கின்றான் ஆனபடிதால் அவனை மூன்றாம் பாடல், பேதை என்று குறிப்பிட்டது. ஐந்தாம் பாடல் மரக்கலம் ஒன்றினைக் கூறுகிறது. இந்த மரக்கலம், காமக்கலன் என்று கூறப்பட்டது. ஐந்தாம் பாடல் கூறும் நான்கு தீய குணங் களுடையவன் அழிவான் என்பது உறுதியேயாகும். நண்பர் களும் ஏளனம் செய்து பேசுவர் என்று ஏழாம் பாடல் குறிக் கிறது. பிறர்க்கு அடிமையாக ஒருவன் வாழ்வதற்குக் காரணம் மடி என்னும் குணமேயாகும். இக்கருத்தினை எட்டாம் பாடல் உணர்த்தும். சோம்பலுள்ளவர்கள் நிறைந்த நாடு அடிமைப்பட்டுக் கிடக்கும் என்பது குறிப்பாகும். . - . . . . . . . . . . ஒருவன் மடிமைக் குணத்தினை மாற்றிவிட்டானே யானால் அவன் குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள் உடனே கெட்டுவிடும் என்பதனை ஒன்பதாம் :பாடல் விளக்கம் செய்கிறது. மடியென்பது இல்வாத மன்னனுடைய சிறப்பினைப் பத்தாம் குறட்பா மிகவும்