பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 தமது சிறுமை நோக்கி எக்காலத்திலும் மலைத்தல் கூடாது. விடாது முயல்வோர் பெரியராவார். ஆகவே அரிதானதும் எளிதாகவே முடியும். இதனை முதற்குறட்பா எடுத்துக்காட்டும். இரண்டாம் குறட்பா இந்த உலகம் யாரை கைவிட்டுவிடும் என்று கூறுகிறது. முயற்சியுடன் தொழில் செய்யாது விட்டவர்களை இந்த உலகம் கைவிட்டு விடும் என்பதாகும். - முயற்சியினால் பொருள் கைகூடும். ஆதலால் பிறர்க்கு உதவிபுரிபவரும் அவர்களேயாவார்கள் எ ன் ப த ைன மூன்றாம் குறட்பா கூறுகின்றது. நான்காம் குறட்பா பேடியானவள் கையில் வைத்திருக்கும் வாளினைக் குறித்துக் காட்டி உண்மையினை நிலை நிறுத்திக் காட்டும். முயற்சி யுடையவனே துன்பத்தினைத் துடைத்துரன்றும் தூண் என்று ஐந்தாம் பாடல் கூறும். செல்வத்தினைத் திருமகள் -தாமரையில் இருப்பவள் என்றும், வறுமையினை, கரிய சேட்டை, மூதேவி என்றும் கூறுவது உலகவழக்காகும். இவர்கள் முறையே முயற்சியுள்ளவனிடத்திலும், இல்லாத. வனிடத்திலும் இருப்பர்களாவார்கள் என்பது, ஏழாம்: பாடலின் கருத்தாக அமைந்துள்ளது. செல்வப் பெருக்கும் வறுமையும் உண்டாவதற்குக் காரணம் முயற்சியும், முயற்சி. இன்மையுமே அடிப்படைக் காரணங்களாகும் என்பது தெளி வாக்கப்பட்டது. உலகம் பழிக்காதபடி நடந்து கொள்ள வேண்டுமென்று: எட்டாம் குறட்பா விளக்கம் செய்கிறது. ஊழ்வினை உதவாவிட்டாலும் முயற்சியால் பலன டையலாம் என்பதனைக் கடைசி மூன்று பாடல்களும் குறித்துக் காட்டுகின்றன. எட்டாம் பாடவில் காணப்படும். பொறி" என்பது விதி என்பதனைக் குறிக்கும். ஊழ், தெய்வம், பால், விதி, பொறி, என்பன ஒரே பொருளினைக் குறிக்கும் சொற்களாகும். பொறிஇன்மை' என்று எட்டாம்