பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 குறட்பா கூறுகின்றது. இயற்கை என்றும், தெய்வம் என்றும் குறிக்கப்படுகின்ற ஊழின் சார்பு இருந்தால்தான் செயல்கள் சிறந்து விளங்கும்-நல்ல பயன் உண்டாகும் என்றாலும், முயற்சி முயன்ற அளவு பயன்தரும் என்பது பேருண்மையாகும், ஒருவன் முயற்சி செய்கின்றானா இல்லையா என்பதைத்தான் உலகம் கூர்ந்து கவனிக்குமே யல்லாமல் அவனுக்கு ஆதரவாக ஊழ் இருக்கின்றதா இல்லையா என்று உலகம் பார்த்துக் கொண்டிருக்காது. ஆள்வினையென்னும் முயற்சியில்லாதவனை உலகம் பழிக் கும் என்று எட்டாம் பாடல் கூறி ஆகவே பழிக்கு அஞ்சுதல் வேண்டும் என்று கூறி ஆள்வினையாளனாக இருத்தல் வேண்டும் என்று குறித்தது. ஒன்பதாம் குறட்பா முயற்சியின் பலனை எடுத்துக் காட்டிச் சிறப்பிக்கின்றது. ஒரு செயலினைச் செய்கின்ற போது தெய்வத்தின் துணை இருந்து விடுமேயானால் அளவிற்கு மீறிய பயனைத் தரும். தெய்வம் என்பது, -ஊழ்வினை இயற்கை என்பதனைக் குறிக்கும். ஊழ் என்ற . அதிகார விளக்கத்தினைக் காண்க. ஊழ்வினை இல்லாவிட்டாலும், முயற்சி பலனளிக் காமல் போகாது, முயன்ற அளவு பயனைத் தந்தே தீரும். "தெய்வத்தான் ஆகாது" என்பதனைச் சிந்தித்தல் வேண்டும். முயற்சி ஏற்ற அளவு கொடுக்கும் என்பதனை கூலி என்ற சொல் விளக்குகின்றது. பத்தாம் குறட்பா 'ஊழ்" என்பதனைக் காட்டி, முயற்சியின் திறத்தினைக் கூறுவதாகும். ஊழையும் உப்பக்கம் காண்பர்’ என்ற இந்தக் குறட்பா, நல்ஆறு எனினும் கொளல் தீது, ஞாலம் கருதி னும் கைகூடும்', 'கூற்றம் குதித்தலும் கைகூடும்', 'கூற்று .டன்று மேல்வரினும் கூடி" என்று வருகின்ற குறட்பாக் களுடன் ஒப்பிட்டுப் பார்த்தற்குரியதாகும். விடாது முயற்சி செய்து, கொண்டே இருக்க வேண்டும் என்பது இக்குறட்பாவின் திரண்ட கருத்தாகும். ஊழ்"