பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 கூறுகின்றது. பொருள் குறைந்தபோது ஒருவன் நினைக்க வேண்டியதை ஆறாம் குறட்பா குறித்துக் காட்டுகிறது. ஏழாம் குறட்பா இந்த உடம்பு துன்பங்கள் தாக்குவதற்கு இலக்கான இடமாகும் என்பதை உணர்ந்து, இடுக்கண் வந்தபோது கலங்கவே கூடாது. இடும்பையினை, இயல்பாக வருவதொன்று என்று அறியும் மனப்பண்பாட்டினைக் கொள்ளுமாறு எட்டாம் குறட்பா கூறுகின்றது. இன்பத் தினை மிகமிக அதிகமாக நுகருகின்ற மனம் படைத்தவனே துன்பம் வந்தபோது கலங்குவான் என்றும், அவ்வாறு கொள்ளாதவன் எந்தத் துன்பத்திற்கும் வருந்த மாட்டான் என்பதை ஒன்பதாம் குறட்பா கூறுகின்றது. பத்தாம் குறட்பா அரியதோர் கருத்தினை வெளியிடுகின்றது. நினைக்கின்ற மனம் படைத்துவிட்டால், பகைவர்களும் போற்றும் சிறப்பினைப்பெறுவான் என்று பத்தாம் குறட்பா குறிக்கிறது. பொருட்பாலில்-அரசியல்’ இத்துடன் 'ழுடிகின்றது. அடுத்துக் கூறப்படுவது அங்கஇயல்" என்பதாகும். அங்க இயல் 64. அமைச்சு அமைச்சனாக இருப்பவனுடைய தன்மையினைக் கூறுவதாகும். அதாவது அவனிடத்தில் இருக்க வேண்டிய குணம், ஆற்றல், செயல் முதலியனவற்றை விளக்கிக் கூறுவ தாகும். முதல் ஐந்து குறட்பாக்களும் அமைச்சரது குணத் தன்மையினை விளக்குகின்றன. ஆறாவது குறட்பா அமைச் சரது சிறப்பினைக் கூறுகிறது. ஏழு, எட்டு குறட்பாக்கள் அமைச்சரது செயலினைக் குறிக்கின்றன. ஒனபது, பத்து பாடல்கள் அமைச்சருள் விலக்கப்பட வேண்டிய்வர்களைக் காட்டுகின்றன.