பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 65. சொல்வன்மை அமைச்சியல் நடப்பதற்குக் காரணமான சொற்களைக் கூறுவதாகும். ஒரு தலையாய் சொல்லும்வல்லது அமைச்சு’ என்பது விரித்துரைக்கப்படுகிறது என்பதாகும், சொல் வன்மை அமைச்சர்களுக்கு இன்றியமையாததாகும் என்ப தனை முதலிரண்டு குறட்பாக்களும் கூறுகின்றன. சொல்லி னது இலக்கணம் மூன்றாம்பாடலில் கூறப்படுகிறது. நான்கு ஐந்து, ஆறாம் பாடல்கள் சொல்ல வேண்டிய முறைகளை விளக்குகின்றன. ஏழாம் பாடல் அருமையான மூன்று தன்மைகளைக் குறிப்பிடுகின்றது. இம் மூன்றினையும் உடையவனை மாற்றாரால் ஒன்றுமே செய்யமுடியாது என்பதாகும். அத்தகைய வல்லாரின் சிறப்பினையும் ஆற்றலினையும் எட்டாம் பாடல் எடுத்துக் காட்டுகிறது. கடைசி இரண்டு பாடல்களும் சொல்வன்மை இல்லாதாரது இழிவினைக் கூறும். அமைச்சர்களுக்கு என்று மட்டுமின்றிப் பொதுப்பட அனைவர்க்கும் இவ்வதிகாரம் பொருந்துமெனக் கொள்ளு தல் வேண்டும். வேந்தன், மன்னன் என்பன போன்ற சொற்கள் சில அதிகாரங்களில் காணப்படும். சிலகுறட்பாக்களில் சொல்லப் படும் அவைகள் சிறப்பாகத் தலைமையான மன்னர்க்கும். பொதுவாக அனைவர்க்கும் என்று கொள்ளுதல் வேண்டும். அதுவே போன்று அமைச்சு-அமைச்சர், என்ற சொற்கள் சில அதிகாரங்களில் காணப்படும். அவைகளிலும் சிறப்பு-பொது என்று கொள்ளுதல் வேண்டும். சில அதிகாரங்களில் காணப்படும் குறட்பாக் களில் மன்னனைக் குறிப்பதோ, அமைச்சரைக் குறிப்பதோ இல்லாமல் இருக்கும். அவ்வாறு கூறுகின்றபோது அனைவர்க்குமே பொருந்தும் என்று கொண்டறிதல் வேண்டும். - . ஆ. வி.-7