பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 'உணரவிரித்துரையாதார்-சில சொல்ல தேற்றாதவர்" என்று குறித்துப் பேசும்-சொல்லும் வன்மையில்லாதவர் களை ஒன்பதாம்-பத்தாம் பாடல்கள் குறித்தன. நாறா மலர்' என்று உவமை காட்டிய பத்தாம் பாடல் நன்கு சிந்தித்து உணர வேண்டியதாகும். நாநலம்-ஓம்பல்அபிணிக்கும், ஊங்குஇல், இன்மை அறிந்து, பயன் கோடல் அரிது, வல்லார்ப் பெறின் -என்பவைகளை நினைவில் நிறுத்தி அறிவிக்கப்பட்ட கருத்துக்களை நன்கு புரிந்து அறிந்து கொள்ளுதல் இன்றியமையாததாகும். 66. வினைத்து ய்மை செய்யப்படும் வினைகள் பொருள் மட்டும் தருவதென்று அல்லாமல் அறமும் புகழும் பயப்பனவாக இருக்க வேண்டும் என்பதாகும். சொல்லேயன்றி செயலும் தூய்மையாக இருக்கவேண்டும். முதல் ஐந்து பாடல்களும் பாவமும் பழியும் உண்டாக்கும் தொழில்களைச் செய்யக் கூடாது. என்பதைக் கூறுகின்றன. ஆறாம் பாடல் தூய்மையானதாக இருத்தல் வேண்டும் என்பதற்கு ஈன்ற தாயின் பசியினைக் காட்டி உண்மை உணர்த்திற்று. கடைசி நான்கு பாடல்களும் தூய்மையானதாக தொழில் புரிதல் வேண்டும் என்பதற்குக் காரணத்தைக் காட்டி விளக்கம் கூறுகின்றன. வேண்டிய எல்லாம் தரும் என்று கூறி முதற் குறட்பா சிறப்பிக்கின்றது. *புகழொடு நன்றிபயவாவினை யை எப்போதும் செய்தலாகாது என்று இரண்டாம் பாடல் கூறும். ஒளிமாழ்கும் செய்வினை யை எப்போதுமே நீக்குதல் வேண்டும் என்று இரண்டாம் பாடல் கூறும். ஒவுதல்" என்பது குறைந்து 'ஓஒதல்' என்று ஆயிற்று. நீக்குதல் வேண்டும் என்பதாகும். நான்காம் குறட்பா நடுக்குற்ற