பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 காட்சியவர் என்று காட்டி, அவர்கள் இழிவந்த வினை களைச் செய்யமாட்டார் என்று பகர்கின்றது. இப்படிப் பட்ட செயலினைச் செய்திருக்கக் கூடாது" என்று, பின்னே வருந்துபவர்களுமுண்டு. அப்படிப்பட்ட செயல்களைச் செய்யவே கூடாது என்று ஐந்தாம் பாடல்கூறுகின்றது. அப்படிச் செய்துவிட்டாலும் மீண்டும் செய்யா தே என்று வற்புறுத்துகிறது. தாய் பசித்திருப்பதை மகன் கண்டு பொறுத்திருக்க மாட்டான். தீயகாரியம் செய்தாலும் பொருள் சேர்த்து அவள் பசியினைப் போக்க நினைப்பான். அப்படிப்பட்ட நேரத்திலும் பழிக்கு ஆளாகும் தொழில்களைச் செய்யாதே என்று ஆறாம் பாடல் தெளிவுப்படுத்துகிறது. பொருளிட்ட வேண்டுமென்று தீயபல செய்து சேர்த்து வைத்திருப்பவனை விட, சான்றோன் என்று பெயர் தேடி வறுமையாளனாக இருப்பது மேலானதாகும். அவனை விட.அவன் சேர்த்தபொருளை விட சான்றோர் வறுமையே உயர்ந்த தென்று ஏழாம் பாடல் விளக்குகிறது. மற்றவர்களை அழும்படிவைத்துப் பொருள் சேர்த்தவன் பொருளெல்லாம் அவன் காலத்திலேயே அவனை அழும்படி செய்து விட்டுப் போய்விடும். நல்வழியில் ஈட்டியபொருள் அவனை விட்டு நீங்கினாலும் பிறகு அவனிடம் வந்தேதீரும். பத்தாம்பாடல் பசுமையான ஈரமான மண்பாத்திரத் தைக் காட்டி உண்மை உணர்த்துகின்றது. ஈரமண்பாத்திரம் நிலைத்திருக்காது. அப்படி இருக்க அந்தப் பாத்திரத்தில் நீரைவிட்டால் என்ன ஆகும்? நீரும் பாத்திரமும் அழியும் மறையும். அதுவே போல, தீயவழியில் பொருள்ஈட்டிய வரும் பொருளும் போகும் என்பதாகும். வினைநலம் - புகழொடு நன்றிபயவாவினை . ஒளிமாழ் கும் செய்வினை . இவரிவந்த - எற்றென்று இரங்குவ - பழிக் கும் வினை - பழி மலைந்து . கடிந்த - அழக்கொண்ட-சலத்