பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 சிந்தித்து ஆராய்ந்து செய்தல் வேண்டும். இதனைத் தொடர்ந்தே ஆறாம் பாடலும் பயனை எண்ணிச் செய்ய வேண்டுமென்பதனைக் கூறுகின்றது. தான் வினை செய்யப் புகுங்கால் செய்யும் போது தனக்கு முன்னே அவ்வினையினைச் சிறியதாகச் இருப் பதைக் கண்டு இகழக் கூடாது. சிறிய அச்சாணி பெரிய தேரைத் தாங்கி நடத்துகிறது. அதுபோல் பல வினை செய்பவர்கள் உண்டு. அச்சுமரம் கண்ணிற்குக்கூட நன்றாகத் தெரிவதில்லை. அதுபோல் சிறந்த பல செயல்: களைச் செய்பவர்கள் பலரறிய வெளிக்குக் காட்டிக் கொள் ளாமலே அரிய சாதனைகளைச் செய்து முடிப்பார்கள் என்பதாகும். ஆய்ந்தவர்கோள் - செய்தக்கது ஆண்மை - சொல்லிய, வண்ணம் செயல் . ஊறு எய்தி உள்ளப்படும் . எண்ணிய, எண்ணியாங்கு எய்துப - தூக்கம் கடிந்து செயல் - இன்பம் பயக்கும் வினை - என்பன போன்றவைகள் எல்லாம் நினை வில் நிறுத்தப்பட்டு அரிய உண்மைகளை அறிவதற்கு உதவு வனவாகும். 68. வினை செயல்வகை வினைகளைச் செய்யும் திறத்தினையும் வழி முறை களையும் கூறுவதாகும். இந்த அதிகாரம், செயல் வகை’ என்று முடிவது போல, தெரிந்து செயல் வகை, பொருள் செயல்வகை, குடி செயல்வகை என்ற அதிகாரங்களும் உண்டு. முதலிரண்டு குறட்பாக்களும் பொது வகையால் - வினை செய்யும் திறத்தினைக் கூறுகின்றன. - வினை செய்யுங்கால் எப்படியெல்லாம் நிலைமைக் கேற்ப செய்தல் வேண்டும் என்பதனை மூன்றாம் குறட்பா கறி விடுகின்றது. வலியான், ஒப்பான், மெலியான் எ.ை