பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 69. தூது வேற்று நாட்டிற்குச் செல்லுகின்ற தூதர்களைப்பற்றிக் கூறுவதாகும். இது முற்றிலும் அரசியல் பகுதியினையே சார்ந்ததாகும். தூது செல்லுபவர்களை, தான் வகுத்துக் கூறுவான். கூறியது கூறுவான் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். "வகுத்துக் கூறுவான்' என்னும் தூதன் அமைச்சனோடு ஒப்பவனாவான். மற்றவன் தகுதியில் கொஞ்சம் குறைந்தவனாவான் என்பதாகும். அவன் கூறியதை மட்டும் போய் கூறிவருபவனாவான். முதலிரண்டு பாடல்களும், இருவகை தூதுவர்களுக்கும் பொதுவான இலக்கணத்தினைக் கூறுகின்றன. மூன்றுமுதல் ஏழு பாடல்கள் வரை முதல் வகைத் தூதுவனாகிய - தான் வகுத்துக் கூறுவான் . என்பவன் இலக்கணத்தை விளக்கிக் கூறுகின்றன. கடைசி மூன்று பாடல்களும் கூறியது. கூறுவான் இலக்கணத்தை விளக்குகின்றன. அன்புடைமை, குடிமை, பண்புடைமை, அறிவுடைமை, சொல்வன்மை, அவையறிதல், அவையஞ் சாமை, கல்வி, காலமறிதல், இடமறிதல், வாய்மை முதலியன போன்ற அதிகாரங்களில் காணப்படும் கருத்துரைகள், தூது உரைப்பவனுக்கு மிகுதி ஆயும் பயன்படுவனவாகும். மூதற் குறட்பாவில் இரண்டு அதிகாரங்களின் பெயர்கள் அப்படியே காணப்படுகின்றன. பரம்பரையாக அறிந்திருத் தல் கூடும் என்பதற்கு வேண்டி ஆன்ற குடிப்பிறத்தல்" என்றார். அவனுடைய முன்னோர்கள் அமைச்சர்களா கவோ தூதுவர்களாகவோ இருந்திருந்தால், வேற்றரசர்கள் இந்தத் தூதுவனையும் அறிந்து மிகுதியும் மதிப்பார்கள் என்பதாகும். இரண்டாம் குறட்பாவிலும் மூன்று அதிகாரங்கள் குறிப்பிடப்படுகின்றன. வேற்றரசரிடம் செல்லுபவனானபடியால் சிறந்த பல தன்மைகள் இருத்தல் வேண்டும் என்பதாகும்.