பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 10 என்று, அவர்கள் வெறுப்பன செய்தல் கூடாது என்று: தெளிவுபடுத்துகின்றன. மாறுபடுதலையும் கொண்ட அரசர்கள் என்பதற்காக, முதற்குறட்பா ‘இகல் வேந்தர் என்று குறிப்பிட்டது. அதா வது கடிதின் கோபம் கொள்ளும் தன்மையர் என்பதாம் குளிர்காய்வது போல அகலாமலும், மிக அணுகாமலும். அவர்களிடம் பழகிக் கொள்ளல் வேண்டும். மன்னர்கள் எப்பொருளின் மீது மிக விருப்பம் கொண்டுள்ளார்களோ அவைகள் மீது தாமும் விருப்பம் கொண்டிருக்கக் கூடாது. என்பதனைக் குறிப்பாக இரண்டாம் குறட்பா காட்டுகிறது, மன்னர் தம்மீது தவறுகண்டு ஐயப்படாதவாறு நடந்து கொள்ளவேண்டும். ஒரு முறை கண்டு விட்டால் பிறகு அவர் மனத்தினை அந்த எண்ணத்திலிருந்து மாற்றுதல் கடின மாகும். இதனை மூன்றாம் குறட்பா எடுத்துக்காட்டுகிறது. மன்னர் அருகில் இருந்தால் பிறருடன் காதோடு காது. வைத்துப் பேசுதல் கூடாது என்று நான்காம் பாடல். கூறுகின்றது. சில மறைபொருள்களை அரசர்கள் தாமே சொன்னால் தான் கேட்கவேண்டும். தாமே போய்க் கேட்டல் கூடா தென்று ஐந்தாம் பாடல் குறிக்கின்றது. சில கருத்துக்களை அரசர்கள் கேட்டாலும் பயனில்லாதவற்றைச் சொல்லக். கூடாது. இது ஏழாம் பாடலின் கருத்தாகும். தம்மைவிட இளைஞர் என்று எண்ணி இகழ்ந்து பேசுதல் தம்மைத்தாமே போக்கிக் கொள்ளுவதாகும் என்று எட்டாம் பாடல் விளக்கு. கின்றது. "கொளப்பட்டேம் என்று எண்ணி என்ற ஒன்பதாம் பாடலும் சிந்தனைக் குரியனவாகும். பத்தாம் பாடலில் காணப்படும், கெழுதகைமை என்ற சொல், பழைமை’ என்ற அதிகாரத்தில் காணப்படும் 'கெழு தகைமை என்ற சொல்லோடு ஒப்பிடுதற்குரியது. அரிது, செவிச்சொல்,