பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 அதனைக் கொடுத்து வைத்துக் கொள்ள வேண்டுமென்று மூன்றாம் குறட்பா அவர்களின் அருமை பினைக் குறிக் கின்றது. . மாறாநீர்வையக்கு அணி - தெய்வத்தோடு ஒப்பக் கொளல் - உறுப்பு ஒரனையரால் வேறு - உற்றது உணர்வார்ப் பெறின் . வகைமை உணர்வார்ப் பெறின் . நுண்ணியம் என்பார் . என்று கூறப்பட்டன அனைத்தும் குறிப்பறிபவர்களின் ஆற்றலினையும் சிறப்பினையும் எடுத்துக் காட்டுவனவாகும். கண்களை உற்று நோக்கி உள்ளத்தில் உள்ளதைக் கண்டு கொள்ளும் திறமை தனிப் பட்ட மேலான ஆற்றலாகும். அது அத்துறையில் பயிற்சி பெற்றவர்களாலேயே முடியும். ஆதலால் தான், ஒன்பது, :பத்துப் பாடல்கள் பார்வையால் அறியமுடியும், என்று உணர்த்துகின்றன. முகத்தினைப் பளிங்கு என்று கூறுகிறது, ஆறாம் குறட்பா; அகத்திற்குக் கண்ணாடி போன்றது முகம் என்று அறியக் கிடக்கின்றது. வெளிநாட்டிலிருந்து வருபவர்களின் எண்ணத்தினை எளிதில் உணர்ந்து கொள்ளுதல் இயலாது. அவர்களை நன்கு உணர்ந்து அதனை மன்னர்க்கு எடுத்துரைத்து அதற் கேற்ப நடந்து கொள்ள அறிவுறுத்த வேண்டியது, குறிப்புணர்வூார்களின் கடமையாகும். 72. அவை அறிதல் மக்கள் நிறைந்திருக்கும் அவையினது இயல்பினைதன்மையினை அறிந்து கொள்ளுதலாகும். அரசியலில் கூறப்பட்டதாகக் கொண்டாலும், பொதுப்பட அனைவர்க் கும் பொருந்துவதாகும் என்று கொள்ளுதல் வேண்டும். முதலிரண்டு பாடல்களாலும் ஒன்று சொல்லும்போது அவையறிந்தே சொல்ல வேண்டும் என்று கூறுகிறது.