பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 மூன்றாவது பாடல் அவையறியாவிட்டால் வரும் குற்றத். தினைக் கூறுகின்றது. நான்கு ஐந்து பாடல்கள் நம்மைவிட மிக்கார் நிறைந்' துள்ள அவைக்கண் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதனை எடுத்துக் காட்டுகிறது. அப்படிப்பட்ட அவைக்கண் சொல்லிழுக்குப்படுவதால் வரும் குற்றத்தினை ஆறாம்பாடல் குறிக்கின்றது. ஏழு எட்டு பாடல்கள் ஒத்தார் மாட்டு எவ்வழியும் சொல்லுக என்று விளக்கம் செய்கிறது. கடைசி இரண்டு குறட்பாக்களும் தாழ்ந்தார் அவைக்கண் எவ்வழியும் சொல்லாதிருப்பாயாக என்று அறிவுறுத்துகிறது. முதலிரண்டு குறட்பாக்களும் முறையே "தொகை அறிந்த தூய்மையவர்- நடை தெரிந்த நன்மையவர்என்று கூறி அவையறியும் ஆற்றல் உள்ளவர்களைச் சிறப்பித்துக் கூறுகின்றன. - அறிவால் சிறந்தவர் அவைக்கண் தாமும் சிறந்த அறிஞராகக் காட்டிக் கொள்ள வேண்டும். அறிவில்லது வர்கள் அவைக்கண் நாமும் அவர்கள் போலவே இருந்து கொள்ள வேண்டும். இவ்வுண்மையினை நான்காம்குறட்பா. அழகிய உவமையினைக் காட்டி எடுத்துரைக்கின்றது. தன்னை விட மிக்கார் அவைக்கண் அடக்கத்துடன் இருக்க வேண்டும். அந்தப் பேரறிஞர்களைவிட, தான் முந்திக் கொண்டு ஒன்றினைச் சொல்லக் கூடாது. இதனை ஐந்தாம் பாடல் எடுத்துக் காட்டுகின்றது. எட்டாம் குறட்பா பயிர் வளரும் பாத்தியினைச் சொல்லி உயர்ந்த கருத்தினை நயம்படக் கூறுகின்றதுர் சிறுமதி படைத்த அறியாதார் அவையில் நற்கருத்துக்களைச் சொல்ல வேசுடாது. அவ்வாறு சொல்லுவது அமிழ்தத்தை தூய்மையில்லாத முற்றத்தின்கண் போட்டதை ஒக்கும். என்று பத்தாம் குறட்பா தெளிவுபடுத்துகிறது. அறியாதா