பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 15 ஆற்றலினைக் கற்கவேண்டும் என்பதைக் குறித்து, ஐந்தாம். குறட்பா அளவறிந்து கற்க என்று கூறுகின்றது. வா ெளாடு என் வன் கண்ணர் அல்லார்க்கு - பகை அகத்து பேடிகை ஒள்வாள் - பல்லவை கற்றும் பயம் இலரே . கல்லாதவரினும் கடையென்ப - இல்லாரோடொப்பர் - என்று குறித்துக் காட்டியவை யெல்லாம் அவையைக் கண்டு அஞ்சிக் கொள்வோரின் இழிவான தன்மையினை எடுத்துக் காட்டியவைகளாகும். . - தொகையறிந்த தூய்மையவர் - கற்றாருள் கற்றார் எனப்படுவர் . மிக்காருள் மிக்க கொளல் - ஆற்றின் அளவறிந்து கற்க - என்று குறிப்பிட்டுக் காட்டுபவைகள் அவையஞ்சாமல் பேசும் ஆற்றல் மிக்கவர்களின் திறத் தினையும்,சிறப்பினையும் நன்கு எடுத்துரைக்கின்றன. வகை,தொகை, கற்றார், பகை, அவை, மிக்கார், மாற்றம், வாள், வன்கண்ணர், நூல், நுண், பேடிகை, இலரே, கடை, இல்லார், ஒப்பார், களன், முதலிய சொற்கள் சிறந்த உண்மைகளை நினைவில் நிறுத்தி உணர்ந்து கொள்ளுவதற்கு உதவியாக இருப்பனவாகும். 74. நாடு நாட்டின் சிறப்பினைக் கூறுவதாகும். அரசனுக்குகிய உறுப்புக்களில் தலையானது நாடாகும். நாடு என்றும், தேசம் என்றும், உலகம் என்றும் ஆசிரியர் கூறுகின்றார். 'எண்ணியதேயத்துச் சென்று என்று கூறுகின்ற இடம் தேசத்தினைக் குறிக்கின்றது. முதல் ஆறுபாடல்களும், நாட்டின் இலக்கணத்தைக் கூறுகின்றன. ஏழாம் பாடல் நாட்டின் இயற்கைவளம் கூறுகின்றது. எட்டாம் பாடல் நாட்டின் அழகிற்கு உரிய ஐந்து தன்மைகளை விளக்கம்