பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 16 செய்கிறது. ஒன்பதாம் பத்தாம் பாடல்கள், நாட்டிற்குக் குற்றம் என்று கூறப்பட்டவைகள் யாவை என்பனவற்றை: எடுத்துக் காட்டுகின்றன. தள்ளாவிளையுள், தக்கார், தாழ்வு இல்லாத செல்வர். அரும் பொருள், விளைவது, பொறை, இறை ஒருவற்கு, நேர்வது, உறுபசி இல்லாமை, ஓவாப்பிணி இல்லாமை, செறுபகை அற்றது, பல் குழுவு இல்லாமை, பாழ் செய்யும். உட்பகை அற்றது, கொல் குறும்பர் இல்லாதது, கேடு அறியாதது, வளங்குன்றாதது, இருபுனல், வாய்ந்தமலை, அரண், ஆக இவையனைத்தும் குறட்பாக்களில் தெளிவு. படுத்தப்பட்டு ஒரு சிறந்த நாட்டிற்கு விளக்கம் செய்கின்றன, விளைச்சல் மிகமிக முக்கியமென்றும், தக்காராகிய சான்றோர்கள் இருக்க வேண்டும் என்றும், செல்வர்கள் இருக்க வேண்டும் என்றும் முதற் குறட்பா கூறுகின்றது. செல்வர் என்பது சிறந்த வணிகர்கள் என்பதைக் குறிப்ப தென்று கொள்ளுதல் வேண்டும். கேடின்மையினையும் விளைச்சலினையும் ஒன்று சேர இரண்டாம் பாடல் கூறு. கின்றது. முதற் குறட்பாவும், இரண்டாம் குறட்பாவும், ஆறாம் குறட்பாவும், எட்டாம் குறட்பாவும், ஒன்பதாம். குறட்பாவும் முறையே, தள்ளாவினையுளும், ஆற்ற வினைவது, வளங்குன்றா, விளைவு, நாடாவளத்தன என்று குறிப்பிட்டிருப்பது சிந்திக்கத்தக்கதாகும். பூமியின் வளமும், நல்ல விளைச்சலுமே நாட்டிற்கு மிகமிக இன்றியமையாத தென்பதனைச் சுட்டிக் காட்டுகின்றன. சாதிபற்றியும், கடவுள் பற்றியும் இன்னும் இவை போன்ற காரணங்களினால் மாறுபட்டிருக்கும் தனித்தனிக். கூட்டங்கள் நாட்டில் இருக்கக்கூடாது என்ற அரிய உண்மை யினை ஐந்தாம் பாடல் உணர்த்திவிடுகின்றது. மன்னனை :இறைவன்' என்று சிறப்பித்துக் கூறுவது, அவன் மக்களைக்