பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பொருளும் உடைத்தாய்" என்பதும் எல்லாக் காலத்திற்கும் பொருந்துபவைகளை அவ்வப்போது அறிஞர்களைக் கொண்டு அமைக்கவேண்டும் என்பதனைக் குறிப்பால் உணர்த்துகின்றன. படை எடுத்துச் செல்லுபவர்களுக்கும் பகைவர் வந்தால் தாக்குவதற்கும் ஏற்றதாக இருப்பது அரனேயாகும். இயற்கையும் செயற்கையும் ஆனவழிகளில் அமைக்கப்படும் அரண்களை இரண்டாம் குறட்பா விளக்கம் செய்கின்றது. பொறிகளால் அணுகுவதற்கும் அருமையாக இருத்தல் வேண்டும் என்பது மூன்றாம் குறட்பா கூறும் உண்மை யாகும். எதிரியின் ஊக்கத்தினை அழிப்பதாக அரண் இருத்தல் வேண்டும் என்பதனை நான்காம் குறட்பா எடுத்துக் காட்டுகிறது, புறத்தார் கொள்ளுதற்கு அரியதாக இருக்கவேண்டும் என்று ஐந்தாம் பாடல் கூறி, பொறிகளாலும் வேறு எம் முறையிலும் அணுகமுடியாத அமைப்புடன் அரண் இருக்கவேண்டும் என்று கூறுகின்றது. அரணின் சிறப்பு அங்குள்ள சிறந்த மறவர்களைக் கொண்டிருப்பதுதான் என்று ஆறாம் பாடல் குறிக்கின்றது. ஏழாம் பாடல், பகைவர்களுக்கு உள்ளாள்களாக இருப்பவர்கள் அணுக முடியாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. எப்படிப்பட்ட போர் நடந்தாலும், நிலை ைம ஏற்பட்டாலும் அரணில் உள்ளவர்கள் அரணில் தம் இடத்தைவிட்டு நகரவே கூடாது என்ற உண்மையினை எட்டாம் பாடல் எடுத்துக் காட்டு கிறது. பற்றியார் பற்றாற்றி வெல்வது அரண்:என்ற குறிப்பு இதனை வற்புறுத்திச் சொல்லுகிறது. போர் தொடங்கியவுடனேயே பகைவர் கெட்டு ஓடும் வண்ணம் அரணில் இருப்போர் செய்யும் பற்பல செயல் களால் பெருமை பெற்றிருப்பதே அரணாகும் என்று