பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 குறட்பா எடுத்துரைக்கின்றது. பொருளற்றார் நிலை. யினைச் சுட்டிக்காட்டுகிறது. உலகவாழ்விற்கு மிகவும் இன்றியமையாததாக இருப்ப. தால் பொய்யா விளக்கம்' என்று மூன்றாம் குறட்பா கூறு கின்றது. பிற விளக்குகளுக்கும் இதற்கும் உள்ள வேறு. பாட்டினைக் குறிக்கும் பொருட்டு எண்ணிய தேயத்துடி. சென்று" என்று கூறினார். பொருளினது சிறப்பு முதல் மூன்று பாடல்களாலும் கூறப்பட்டது.

  • திறனறிந்து திதின்றி வந்த பொருள்' என்று கூறும். நான்காம் பாடலும், அருளொடும் அன்பொடும் வாராப்பொருளாக்கம் என்று கூறும் ஐந்தாம் குறட்பாவும் பொருளிட்ட வேண்டிய துயமுறைகளைக் கூறி மெய்ப்பிக் கின்றன. அறம் செய்பவர்களாகக் கருதப்படுபவர்களும் திதின்றி வந்த பொருளால்தான் செய்தல் வேண்டும் என்றும், அவ்வாறு நன்னெறியால்வாராத பொருளால் செய்வது அறமாகாது என்றும் குறிப்பால் உணர்த்தப் பட்டதாகும். - -

ஆறாம் பாடல் நாட்டிற்குக் கடமையாக வரவேண்டிய பொருள் வருவாய் முதலியவற்றைக் குறித்தன. செல்வச் செவிலி' என்ற ஏழாம் பாடல் ஆழ்ந்த பொருள் வைத்து. எடுத்துக் காட்டுகிறது. உலகில் கூறப்படும் செவிலியர்' போல் அல்லாமல், தானே எல்லாப் பொருளும் கொடுத்து உதவி வளர்த்தலால்,செல்வச் செவிலி' என்று கூறினார். எட்டாம் குறட்பா அருமையான நிகழ்ச்சியொன்றினைக் காட்டுகிறது. அதுவே யானைப் போர் ஆகும். குன்றின் மேல் ஏறிச் செல்பவனைக் கூறியது ஆழ்ந்த சிந்தனைக் குரியது. அச்சமும் வருத்தமும் இல்லாதிருப்பான் ஆனபடி யால், குன்றேறி" என்றார். ஒன்பதாம் பாடல், கூரிய எஃகு என்று கூறுகிறது. சிறந்த படைக்கலம் ஆகும். நல்ல நெறியால் வரும் பொருளினைப் படைத்தவர்களுக்கு,