பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 அறனும் இன்பமும் ஒருங்கே எளிமையாகவரும் என்பதனைப் காத்தாம் பாடல் கூறுகின்றது. பொருளாகச் செய்யும் - எல்லாரும் செய்வர் சிறப்பு . பொய்யா விளக்கம் - அறம் ஈனும் இன்பமும் ஈனும் - வேந்தன் பொருள் . செல்வச் செவிலி . உண்டாகச் செய் வான் - செய்க பொருளை - ஏனை இரண்டும் ஒருங்கு - என்பதாகக் குறிப்பிட்டனவெல்லாம் என்றும் நினைவில் நிறுத்தப்பட வேண்டியனவாகும். பொருளின் சிறப்பினை :வும், ஈட்ட வேண்டிய முறையினையும், பயனையும் உணர்த்தினவாகும். 77. படை மாட்சி பொருளின் துணை கொண்டு வெல்வதாகிய படையின் சிறப்பினை படைமாட்சி படைச் செருக்கு" என்று இரண்டு அதிகாரங்களால் கூறுகின்றார். படைமாட்சி" என்ற இவ் அதிகாரம் படையின் சிறப்பினைக் கூறுவதாகும். முதல் மூன்று பாடல்களும், அரசனுக்குரிய உறுப்புக்களுள் படைதலை சிறந்தது என்பதனையும், அவைகளுள்ளும் மூலப்படை சிறந்தது என்பதை, அதனுள்ளும் வீரன் சிறந்த வனாவான் என்பதனையும் கூறுகின்றன. t நான்கு முதல் ஏழாம் பாடல் வரை படையினது இலக்கணம் கூறப்படுகிறது. கடைசி மூன்று குறட்பாக்களும் படையின் சிறப்பு இன்மையானும், அரசன் கொடைத் தன்மை இன்மையாலும், தலைவர் இன்மையாலும் படை தாழ்வுற்று விடும் என்பதனைக் கூறுகின்றன. - துன்பத்திற்கு அஞ்சக் கூடாது என்பதனையும் செல்வத்துள் எல்லாம் அரசனுக்குத் தலையான செல்வம் படையேயாகும் என்பதனை முதற் குறட்பா குறித்துக் காட்டுகிறது. மூலப்படையொன்று சிறப்பு வாய்ந்தது என்பதனை இரண்டாம் பாடல் தொல்படை' என்று கூறு , கிறது.: -