பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 .களும் கூறுகின்றன. நட்பு என்ற இவ்அதிகாரம் நட்பு என்பதன் சிறப்பினையும் நண்பர்களின் கடமையினையும் விளக்கிக் கூறுகின்றது. நட்பு செய்தல் அருமையான தென்றும் தனக்குச் சிறந்த பாதுகாப்பு ஆகுமென்றும் முதற்குறட்பா கூறுகின்றது . பொழுது போக்குக்காக நட்பு என்று கூறுவார் உண்டென் றால் அது தவறாகும். நல்லவர்கள் நட்பும் பேதையார் நட்பும் இரண்டாவது குறட்பாவில் கூறப்படுகின்றன. மதி வளர்வதையும் குறைவதையும் எடுத்துக் காட்டாகக் காட்டி இரண்டாம் குறட்பா விளக்கம் தருகிறது. பண்புடையாளர்களின் நட்பினை சிறந்த நூல்களைசி கற்பதற்கு ஒப்பிட்டு மூன்றாம் குறட்பா தெளிவுபடுத்து கிறது. நட்பின்சிறப்பு இரண்டுமூன்று பாடல்களால் கூறப்பட்டது. நட்பினுடைய பயனை நான்காம் குறட்பா கூறும். நட்பிற்கு மனத்தில் தோன்றும் உணர்ச்சியே போதும்என்று ஐந்தாம் குறட்பா தெளிவாக்குகிறது. கடைசி ஐந்து குறட்பாக்களும் நட்பினது இலக்கணத்தைக் கூறுகின்றன. பேதைமை, கல்வி, பண்புடைமை, இடுக்கணழியாமை என்பன போன்ற அதிகாரங்களின் குறிப்புகள் குறட்பாக் களில் காணப்படுகின்றன. நண்பன் நகைத்து மகிழ்வதற்கு அல்ல; இடித்துரைத்து நல்வழியில் செலுத்துபவனாக இருக்க வேண்டும் என்று நான்காம் குறட்பா வலியுறுத்து கிறது. மனத்தோடு பொருந்திப் பழகுவதே நட்புக்கு இலக்கணமென்று ஆறாம் குறட்பா எடுத்துக் காட்டும். நண்பனுக்குற்ற துன்பத்தினைத் தானும் உடனிருந்து நுகர்தலே நட்பாகும் என்று ஏழாம் குறட்பா தெளிவு படுத்தும். நண்பன் துன்பத்தினை உடனே சென்று நீக்குதல் வேண்டும். அவன் தேடி வந்து கூப்பிடுவான் என்று காத்திருக்கக் கூடாது. ஆடை குலைந்தபோது அப்பொழுதே அசென்று உதவுகின்ற கைபோல உதவவேண்டும். இக்