பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 கருத்தினை எட்டாம் குறட்பா சிறப்பாக விளக்கம். நண்பர்கள் ஒருவரையொருவர் பிறர்க்கு அறிமுகம் செய்து வைக்கும் போது இவர் எனக்கு இத்தன்மையர்" என்று பிரித்துப் பேசுதல் கூடாது. நட்பு என்ற இலக்கணத், திற்கு அது குறையாகி விடுமாம். அவரே நான்-நானே அவர் என்பது போலப் பேசுதல் வேண்டும் என்பது குறிப்பு. செயற்கு அரிய . நிறைநீர . இடித்தற் பொருட்டு உணர்ச்சிதான் - அகம்நக - உழப்பதாம் - களைவதாம் . ஊன்றும் நிலை . புனையினும், என்று கூறப்பட்டவைகள் எல்லாம், நட்பு என்பதன் அரிய உண்மையினையும், நண்பர் களின் பெருஞ்சிறப்பினையும் நினைவுபடுத்துவனவாகும். 80. நட்பு ஆராய்தல் நன்கு ஆராய்ந்த பிறகே ஒருவரை நண்பராக உண்டக்கிக் கொள்ள வேண்டும் என்பதும், அவரை ஆராயும். திறமையும் விளக்கிக் கூறுவதாகும். முதலிரண்டு பாடல் களும் ஆராயாமல் நட்பு கொள்ளுவதால் வரும் குற்றம் கூறப்பட்டது. . - மூன்று முதல் ஆறு பாடல்கள் வரை ஆராயும் முறையும் ஆராய்ந்த பிறகு நட்பு செய்யக் கூடியவர்கள் இவர் என்பதனையும் கூறுகின்றன. ஏழு, எட்டு, ஒன்பது பாடல்கள் ஆராய்ந்த பிறகு நட்பு செய்யக் கூடாதவர்கள் யார் யார் என்று கூறுகின்றன. இரு வகையினரையும் தொகுத்துப் பத்தாம் பாடல் விளக்கம் செய்கிறது. ஆராயாமல் நட்பு செய்வது பெரும் இங்கு செய்துவிடும். ஒருவனை நண்பனாகக் கொண்ட பிறகு அவனை விட்டு நீக்க முடியாது. அது நட்புக்கு இழுக்காகும். ஆதலால்