பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கோலாக ஒருவனுக்கு உண்டாகின்ற கேடு உதவுகின்றதாம் உண்மையான நண்பனையும், பொய்யான நண்பனையும் அப்போது தெரிந்து கொள்ள முடியும். இக்குறட்பா, “நீட்டி அளப்பதோர் கோல்' என்று கூறி நன்கு அறிவு புகட்டுகிறது. பேதைகளின் நட்பினை நீக்கி விடுவது ஒருவனுக்கு நல்ல ஊதியம் - இலாபம் - கிடைத்தது போன்றதாகும் என்பது ஏழாம் பாடலின் கருத்தாகும். ஊதியம் என்பது ஒருவற்கு என்று தொடங்கும் இக்குறட் 'ாவின் கருத்து அரியதொன்றேயாகும், எட்டாம் குறட்பா மிகமிக அஞ்சத்தக்க நண்பர்களைப் பற்றி உண்மையினை எடுத்துக் காட்டுகிறது. நமக்குத் துன்பம் வந்த போது கை விட்டுப் போவார் நட்பினைக் கொள்ளாதே என்று கூறு கிறது. கொள்ளற்க' என்று தெளிவு படுத்துகிறது. அதுவே போன்று ஒன்பதாம் பாடலும், கெடுதி வந்தபோது கைவிட்டுப் போகின்றவர்களின் நட்பினை, தன்னைக் கூற்று வன் வந்து பிடிக்கும்போது நினைத்தாலும் உள்ளத்தினைச் சுட்டுவிடும் என்று கூறுகிறது. அடுங்காலை உள்ளினும்’ என்று காணப்படுவது தீயவர்களின் கொடுஞ்செயலைப் புலப்படுத்துகிறது. பத்தாம் குறட்பா நல்லோர் நட்பினை வும் தியோர் நட்பினையும் இணைத்துக் கூறி இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டினைக் கூறுகிறது. நான்காம் குறட்பா, நல்லோர் நட்பினை ஒன்று கொடுத்தேனும் கொள்ளுதல் வேண்டும் என்றும், பத்தாம் பாடல் தீயோர் நட்பினை ஒன்று கொடுத்தேனும் விட்டு விடுக என்று உணர்த்தி இருப்பது மிகுதியும் சிந்தனைக்குரியதாகும். . 81. பழைமை நண்பர்கள் மிகவும் பழைமை தொட்டு வருபவர்களாக இருப்பின் அவர்கள் தவறு செய்தாலும் பொறுத்துக்கொல் ளல் வேண்டும் என்பதனைக் கூறுவதாகும். ஆராய்ந்து நட்பு செய்து கொள்ளப்பட்டவர்கள் என்று இருந்தாலும்