பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 30 'கெழுதகைமை என்பது பழைய நண்பர்கள் செய்ததை உரிமையால் பொறுத்துக் கொள்ளுதலாகும். பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும் என்ற கருத்து மன்னரைச் சேர்ந்தொழுதல்’ என்ற அதிகாரத்தில் கூறி இருப்பது இங்கு சிந்திக்க வேண்டியதொன்றாகும். ஒன்பது பத்துப் பாடல்கள் பழைமையறிபவர்கள் அடையும் பயனை எடுத்துக் காட்டுகின்றன. பழைய நண்பர் களை விடாதவர்களை உலகம் விரும்பிப் பாராட்டும் என்று ஒன்பதாம் பாடல் சொல்லுகிறது. விடார் விழையும் உலகு" என்று குறிப்பிட்டுக் காட்டுவது சிந்திக்கத்தக்க தாகும். பத்தாம் பாடல், பழைய நண்பர் க ள் பிழை செய்தாராயினும், அவரிடத்தில் தமது பண்பினால் நீங்காத வர்கள், பகைவராலும் பாராட்டுதற்குரியவர் என்று விளக்கம் செய்கிறது. விழையார் விழையப்படுப என்பது அரிய உண்மையினை உணர்த்திவிட்டது. - 82. தீ நட்பு பொறுக்கப்படாத குற்றங்களுடையவர்கள் நட்பினை விட்டு விட வேண்டும் என்பதாகும். தீய குணங்களை உடையவர்களது நட்பு என்று கூறப்படும். தீயகுணம் உள்ள வர்கள் ஆனபடியால் தீய நட்பினர் என்று கூறப்பட்டனர். தீவினையச்சம்' என்ற அதிகாரம் போன்றதாகும். கூடா நட்பு என்றொரு அதிகாரம் உண்டு. இதனை அடுத்து அது உள்ளத்தில் நட்பு எண்ணமே இல்லாமல் - மனத்தால் கூடாமல் - தீமை செய்வதற்காகவே, தகுந்த காலம் வரும்வரை, நண்பர்கள் போலப் பழகிவருபவர்களா வார்கள். தீய குணங்களை அறவே விட்டுவிட்ட பிறகு தீ நட்பு என்று கூறப்பட்டவர்களும் நல்லவர்களாகலாம்.