பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 கிறது மூன்றாம் குறட்பா. களவரும் நேர்' என்று குறட். பாவில் அமைந்துள்ளது. மற்ற நேரத்தில் எல்லாம் தாங்கிக் கொண்டிருந்த, போர்க் குதிரை போர் வந்தபோது போர்க்களத்திலே கீழே. தள்ளிவிட்டுப்போவது போன்ற தீநட்பினரும் ఒ657@. இக் கருத்தினை, நான்காம் குறட்பா, அமரகத்து தனிமை தலை" என்ற இரண்டு குறிப்புக்களாலும் உணர்த்துகின்றது. அறிவுடைமையார் பகைமை கோடிமடங்கு நல்லது என்று. கூறி ஆறாம் குறட்பா விளக்கம் செய்கின்றது. ஏதின்மை கோடிஉறும்" என்ற குறட்பாவின் குறிப்பு: நன்கு எடுத்துக்காட்டுகிறது. சில தீய நண்பர்களைக் கனவிலும் கூட நினைக்கக் கூடாதென்று ஒன்பதாம் பாடல் புலப்படுத்தும். கனவில் நினைத்தாலும் துன்பத்தினைத். தரும். நகைத்துக்கொண்டே தீமை செய்கின்றவர்கள், முடிவதையும் முடியாது என்பவர்கள்-ஆக இத்தகைய தீய நண்பர்களைவிலக்குதல் நல்லது. s 3. கூடா நட்பு இவர்கள் பகைவர்களேயாவார்கள். மனதால் கூடாமல் இருந்து, தமக்குத் திங்கு செய்வதற்கு வாய்க்கும் இடமும் நேரும் வரும்வரை புறத்தே நண்பர்கள் போலக் கூடிப் பழகுபவர்கள் ஆவார்கள். உட்பகையினர்' போன்றவர்க ளாவார்கள் என்றே சொல்லுதல் வேண்டும். முதலிரண்டு பாடல்களும் கூடாநட்பினது குற்றத். தினைக் கூறுகின்றன. மூன்றாம், நான்காம் பாடல்கள் அக் குற்றத்திற்குக் காரணமான அவர் கொடுமையினைக் கூறுவனவாகும். ஐந்து முதல் ஏழு பாடல்கள் அவர்களைப் பேசும் சொற்களினால் தெளிந்து கொள்ளக் கூடாது என்று. குறிப்பிடுகின்றன. ". . . .