பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 85. புல்லறிவாண்மை இது புல்லிய அறிவினை ஆளுகின்ற தன்மை எண் விரியும். அதாவது தான் சிற்றறிவினனாக இருந்தே தன்னைப் பேரறிவினனாகக் கருதிக் கொண்டு உயர்ந்தோர். கூறும் உறுதியினைக் கொள்ளாதிருத்தலாகும். முதற். குறட்பா புல்லறிவினது குற்றத்தினைக் கூறுகின்றது. அப் புல்லறிவாளர்கள் தமக்கு நன்மை செய்து கொள்ளுவதை அறிய மாட்டார்கள் என்று இரண்டாம் பாடல் கூறுகின்றது. மூன்றாம் பாடல் அவர்கள் தமக்குத் தீமை செய்து கொள்ளுவதை அறிவார்கள் என்று குறிக்கின்றது. நான்கு, ஐந்து, ஆறு ஆகிய மூன்று பாடல்களும் அவர்கள் தம்மைத்தாமே வியந்து கொள்ளுவார் என்று எடுத்துக் காட்டுகின்றன. கடைசி நான்கு குறட்பாக்களும் அவர்கள் பிறர் கூறும் உறுதிச் சொற்களைக் கொள்ள மாட்டார்கள் என்பதை விளக்குகின்றன. அறிவில்லாத்தன்மை மிகவும் இழிநிலையினைத் தருவது. என்று கூறுகின்ற முதற் குறட்பா, 'பிறிது இன்மை இன்மையா வையாது உலகு என்று கூறி, அறிவின்மை உலகில் மிகவும் தாழ்வாகப்படும் என்று உணர்த்திற்று. "பெறுவான் தவம்’ என்று கூறுகின்ற இரண்டாம் குறட்பா, அறிவில்லாதவனுக்கு ஈகை என்பதே தெரியாதென்றும், அவன் அப்படி யாருக்காவது ஒன்று கொடுத்தால் அதன் காரணம் என்னவென்பதை அழகாகக் குறிப்பிடுகின்றது. தனக்குத்தானே தீமையினை உண்டாக்கிக் கொள்ளு. வதில் புல்லறிவாளர்களுக்கு இணை யாருமே இல்லை என்ற உண்மையினை மூன்றாம் பாடல் கூறுகிறது. இப்பாடலில், செறுவார்க்கும் செய்தல் அரிது’ என்று குறித்துக் காட்டுவது நிறைந்த பொருள் பொதிந்ததாகும். தனக்குத் தானே எல்லாம் தெரியும் என்று புல்லறிவாளர்கள்