பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 எப்போதும் செருக்குடனே இருப்பார்கள் என்பதனை என்னும் செருக்கு என்பதாக முடியும் நான்காம் பாடல் தெளிவுபடுத்துகிறது. தான் கற்றிராத நூல்களையும் கற்றவர்களாகப் பேச முன் வருவதும் புல்லறிவாளர்களின் பழக்கங்களில் ஒன்று. இதனை ஐந்தாம் பாடல் அறிய வைக்கின்றது. அருமறை" என்று தொடங்கப் பெறுகின்ற ஏழாம் குறட்பா எப் பொருளையும்-கருத்துகளையும்.போற்றாமல் போக்குகின்ற தன்மை புல்லறிவாளர்களிடம் உண்டு என்று கூறுகின்றது. புல்லறிவாளர்களிடம் இருக்கும் இழிய குணத்தினை ஒரு நோய்" என்று எட்டாம் பாடல் கூறும். இந்நோய் மிகமிகக் கொடிய நோய் என்பதாகும். அது. சாகும்வரை அவர்களிடம் இருப்பதாகும். யாரேனும், புல்லறிவாளனுக்கு நல்லதைச் சொல்லச் சென்றால் ஆவன். எப்படி நடந்து கொள்ளுவான் என்பதனை ஒன்பதாம் பாடல் எடுத்துக் காட்டுகிறது. இப் பாடலின் கருத்து மிகவும் சிந்தனைக்குரியதாகும். உயர்ந்தோர் பலரும்கூறுவதைப் புல்லறிவாளன் இல்லை யென்று மறுப்பான். இது அவனுடைய இயல்பாகும். ஆதலால்தான் அவனுடைய தன்மையினை உலக வழக்கில் வைத்துக் கூறும் ஆசிரியர், அவன் ஒரு பேய்" என்று கூறு கிறார். வையத்து அலகையா வைக்கப்படும் என்று பத்தாம் பாடல் கூறி, இக்கருத்தினை நன்கு விளக்கம் செய்கிறது. 86. இகல் இகல் என்னும் இக்குணம் வெகுளியால், அதாவது கோபத்தினால் உண்டாவதாகும். இகல்தான் பகைமை அயினை வளர்த்து முற்றச் செய்வதாகும். அதாவது இருவர் தம்முள் சண்டையிட்டுக் கொள்வதற்காக மனதில் உ ண்டாக்கிக் கொள்ளும் மாறுபாடு.