பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 பிறரிடம் இகல் கொள்ளுவது-மாறுபட்ட மனம் கொள்ளுவதுதான் இனிது-என்று கூறுபவனின் வாழ்க்கை கெட்டே விடும் என்பதனை ஆறாம் பாடல் வற்புறுத்திக் கூறுகிறது. தவலும் கெடலும் நனித்து என்று கூறியிருப்பது விளக்கம் தருவதாகும். வெற்றியறிதலை, அறிய முடியாதவர்கள்தான். இகவினைக் கொள்ளுவர் என்பது ஏழாம் பாடலின் கருத்தாகும். இக் குறட்பாவில், இன்னா அறிவினவர்" என்று கூறி இருப்பது உண்மையினை உணர்த்தி விடு: கின்றது. ‘இகல் தோன்றினால் அதனை எதிர்த்தே ஒழிக்க வேண்டும் என்று சொல்லக் கருதி, எதிர்சாய்தல் ஆக்கம்" என்று எடுத்துக் காட்டுகிறது, எட்டாம் பாடல் என்பதாம், ஒருவனுக்கு ஆக்கம் வருகின்றபோது இகலினை நினைக்க மாட்டான், ‘இகல் காணான்' என்று கூறுவது ஒன்பதாம் பாடலாகும். ஒருவனுக்கு மாறுபாடு-இகல்ஒன்றினாலே, துன்பம் எல்லாம். உண்டாகும் என்பதாகும். நட்பு ஒன்றினாலே, நல்ல நீதி என்கின்ற பெருஞ் செல்வம் உண்டாகும். இதன்ை நன்கு வற்புறுத்திக் கூறுவது பத்தாம் குறட்பாவாகும். 87. பகைமாட்சி அதாவது அறிவின்மையினாலும், அது போன்ற குற்றங் களினாலும் பகைமையினை மாட்சிப்படுத்தலாகும். பகையினையே பெருமையாக நினைத்துக் கொள்ளுவதாகும். ‘இகல் போல இது மிகவும் கொடிய குற்றமேயாகும். 'இறைமாட்சி படைமாட்சி" என்ற அதிகாரங்களில் கூறப் பட்டுள்ள மாட்சி இந்த அதிகாரத்திலும் காணம் படுகின்றது.