பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 முதற் குறட்பா பகைமாட்சி' என்பதனைப் பொது, வகையால் விளக்கம் செய்கின்றது. இரண்டு முதல் ஏழு பாடல்கள், பகைமாட்சி" என்பதனைச் சிறப்பு வகையால் விளக்கிக் காட்டுகின்றன. கடைசி மூன்று குறட்பாக்களும் அதனாலான பயனைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. தம்மைவிட மிக்க பகையாய் வன்மையுடையவர்களாக இருப்பவர்களை எதிர்ப்பதை நீக்குதல் வேண்டும். ஏனை, மெவியவர்களுக்குப் பகையாய் இருப்பதை ஒழியாது விரும்ப வேண்டும். வெல்வதற்கு இது வழியாகும். அரச நீதி கூறுவதால் இவ்வாறு கூறினார். அருளுடைமை யில்-வலியார் முன் தன்னை நினைக்க-என்பது சிந்திக்கத் தக்கது. இவ்வாறே பிற இடங்களையும் கண்டு தெளிக, "ஒம்புக, ஒம்பா" என்று கூறும் முதற் குறட்பா நன்கு அரச நீதியினைப் புலப்படுத்திவிடுகிறது. பகைவனை வெல்ல முடியாதவனிடத்தில் இருக்கும் மூன்று தீய தன்மைகளை இரண்டாம் குறட்பா எடுத்துக்காட்டி என்பரியும் ஏதிலான் துப்பு’ என்று முடிகிறது. மெய்ம்மை நன்கு எடுத்துக் காட்டப்பட்டது. பகைக்கு மிகவும் எளியவனாகி, அவரிடம் தஞ்சம் புகுகின்றவனிடத்தில் காணப்படும் நான்கு தீய குணங்களை எடுத்துக் கூறிய மூன்றாம் குறட்பா, அப்படிப் பட்டவன் தஞ்சம் எளியன் பகைக்கு" என்று தெளிவு படுத்துகிறது. எவ்விடத்திலும், எக்காலத்திலும் பகைவரிகளுக்கு எளிதானவனிடம் காணப்படும் கொடுமையான இரண்டு குணங்களை நான்காம் குறட்பா வற்புறுத்திக் கூறி, "யார்க் கும் எளிது' என்று முடிகிறது. பகைவன் எளிமையாக இவனைத் தோற்கடித்து விடுவான். மேலும், தீமைதரக்கூடிய நான்கு தன்மைகளை ஐந்தாம் குறட்பா எடுத்துக்காட்டி, இவைகள் இருக்கும் ஒருவன் பகைவர்களால், இனிய பகை' என்று கருதப்பட்டு வீழ்த்தப்