பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 படுவான் என்று குறிக்கிறது. பற்றார்க்கு இனிது என்று ஐந்தாம் பாடல் முடிவது சிந்தனைக்குரியதாகும். பகைவர்கள் எந்தப் பகைவனை விரும்பிக் கொள்ளு வார்கள் என்பதனை ஆறாம் குறட்பா எடுத்துக்காட்டி அவ னிடம் காணப்படும் இரண்டு தீமையான குணங்களைக் குறித்துக் காட்டுகிறது. சில பொருள் அழியக் கொடுத்தே னும் சில பகையினைக் கொள்ளுதல் வேண்டும் என்று ஏழாம் குறட்பா கூறும். கொடுத்தும் கொளல் வேண்டும்’ என்கிறது குறட்பா. எட்டாம் குறட்பா, பகைவர்க்குத் துணையாகும் தன்மையுடையவனைக் கூறிவிடுகின்றது. பகைவர்க்கு அவன் பாதுகாப்பானாவன் என்று கூறி "ஏமாப்பு உடைத்து" என்று முடிப்பதாகும். பகைவர்க்கு உயர்ந்த இன்பத்தினைக் கொடுக்கும் பகைவனான மன்னனிடம் எத்தகைய குண மிருக்கும் என்பதனை ஒன்பதாம் குறட்பா கூறி, அஞ்சும் பகைவர்ப் பெறின் என்று முடிகின்றது. நீதி நூல்களைக் கல்லாத அரசனோடு பகைத்து போரிட்டு வென்று அவன் பொருள்களைக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு செய்யாத மன்னனைப் புகழ் எக்காலத் திலும் வந்து அடையாது என்று பத்தாம் பாடல் தெளிவுற உணர்த்துகின்றது. பகைவர்களினால் வெல்லப்படும் அரசனிடம் காணப்படும் தீய குணங்கள் பற்பலவாகும். அவைகளாவன: அன்பிலன்.ஆன்றதுணையிலன்.தான் துவ்வான் - அஞ்சும் அறியான் - அமைவு இல் - சகலான் - நீங்கான் . வெகுளி. நிறையிலன்-வழிநோக்கான்.வாய்ப்பன செய்யான் - பழி நோக்கான் - பண்பிலன் - காணாச்சினத் தான் - கழிபெரும் காமத்தான் - அடுத்திருந்துமாணாத செய்வான் - குணம் இலன் - குற்றம் பல - அறிவு இலான் - அஞ்சும் - கல்லான், இப்படிப்பட்ட தன்மைகள் உடைய அவனை பகைவர்கள் எளிதில் வென்றுவிடுவார்கள்.