பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 ஆறாம் குறட்பா, நட்பு, பகை என இரண்டு வகையிலும் கொள்ளாமல், இடையே விட்டு வைக்க வேண்டியவர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. ஏழாம் குறட்பா, நண்பர்களிடத் தும் பகைவர்களிடத்தும் எப்படி இருக்க வேண்டும் என்பதனைக் கூறுவதாகும். எட்டாம் குறட்பா, பகைவரை எவ்வாறு அழித்தல் வேண்டும் என்று காட்டுகிறது. ஒன்பதாம் குறட்பா, பகைவர்களை முள்மரம்’ என்று கூறி தொடக்கத்திலேயே களைந்து எறிய வேண்டும் என்று வற்புறுத்துகிறது. அவ்வாறு களையாவிட்டால் வரும் தீமையினைப் பத்தாம். குறட்பா தெளிவுபடுத்துகிறது. நகையேயும் வேண்டற்பாற்று அன்று - வில்லேர் உழவர்' பகை, சொல்லேர் உழவர் பகை - ஏமுற்றவரினும் - ஏழை - பகை நட்பாகக்கொண்டொழுகும் பண்புடைமை - இன் துணையாக் கொள்க - தேறான்பகான் விடல் - நோவற்க, மேவற்க - பகைவர்கண்பட்ட செருக்கு - முள்மரம் கொல்க . செயிர்ப்பவர் செம்மல் - என்பதாக பத்துக் குறட்பாக்களி லும் முறையே கூறப்பட்டவைகள் எல்லாம் பகைவகைகளை யும் கூறி அவைகளிடத்தில் நடந்து கொள்ள வேண்டிய வல்வகைநெறி முறைகளையும் எடுத்துக் காட்டி உணர்த்திய வைகளாகும். 89. உட்பகை அதாவது, புறத்தே இருக்கும் பகைக்கு, இடனாக்கிக் கொடுத்து, அது வெல்லும் வரையிலும் உள்ளாய் - உட னாகவே இருந்து . நிற்கும் பகை என்பதாகும். இத்தகைய பகையினை உடனே களைந்து நீக்குதல் வேண்டும் என்க: தாகும். - முதலிரண்டு பாடல்களும் உட்பகை ஆகாது என்று கூறு: கின்றன. மூன்று முதல் ஆறு பாடல்கள் வரை, உட்பகை