பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 46 என்பது பிறிதொரு அதிகாரமாகும். ஒன்னார்த் தெறலும், உவந்தாரை ஆக்கலும் என்று, ‘தவம்’ என்ற அதிகாரத் தில் வரும் குறட்பா சிந்தனைக்குரியதாகும். பொதுவகையால் பெரியார்களுக்குக் குற்றம் செய்யா திருக்க வேண்டும் என்பதனை முதற் குறட்பா எடுத்துக் கறுகிறது. பெரியார்களைப் போற்றாமல் அவமதித்தால் வரும் குற்றம் இரண்டாம் பாடலால் அறியப்படுகிறது. மூன்று நான்கு குறட்பாக்கள் வேந்தரை நன்கு மதிக்காத தால் வரும் குற்றங்களைக் கூறுகின்றன. அப்படிப்பட்ட குற்றமுடையவர்கள் எப்படிப்பட்ட அரணைச் சேர்ந்தாலும் தப்பிக்க முடியாது என்பதை ஐந்தாம் பாடல் எடுத்துக்காட்டுகிறது. ஆறு முதல் ஒன்பது பாடல் வரை,முனிவர்களாகிய தவத்தோர்களுக்குக் குற்றம் செய்தால் வரும் தீங்கு குறிக்கப்பட்டது. மிக்க தவத்தினையுடைவர்கள் கோபிப்பாராயின், பெரிய துணையினைக் கொண்டிருக்கும் வேந்தர்களும், தப்பித்தல் இயலாது என்ற உண்மையைப் பத்தாம் பாடல் தெளிவுப்படுத்துகிறது. கணமேயும் காத்தலரிது’ என்று -நித்தார் பெருமை என்ற அதிகாரத்தில் கூறப்படுவது சிந்திக்கத் தக்கதாகும்: போற்றலுள் எல்லாம் தலை’ என்று முதற் குறட்பா பெரியார்களின் அருமையினைக் கூறுகிறது. இரண்டாம் பாடல் பேரா இடும்பைதரும்’ என்று கூறி பெரியார்களுக் குத் தவறு செய்வதால் வரும் கேட்டினை விளக்கம் செய் இறது. கெடல் வேண்டின் கேளாது செய்க" என்று மூன்றாம் பர்ட்ல் குறிப்பிட்டிருப்பது கெடுதிவருவது உறுதி என்பதைக் கூறுகின்றது. நான்காம் பாடல் குறித்துக் காட்டும் நிகழ்ச்சி இந்தனைக்குரியது. யமனைக் கையால் கூப்பிடுவது போன்ற தாகும் என்று கூறுகிறது. கூற்றத்தைக் கையால் விளித்