பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 "பகைமாட்சி என்ற அதிகாரத்தில் ஆறாம் குறளில், 'கழிபெரும் காமத்தான்' என்று கூறி இருப்பதும். கிந்திக்கத்தக்கதாகும். கணவன் தனக்கு அடங்கி அஞ்சி. குற்றவேல்செய்வதை கற்புள்ள மனைவி விரும்பமாட்டாள். அத்தகைய இயல்பினைக் கண்டு மகிழவும் மாட்டாள். நாயகன் தவறாக இருக்கும்போது துணைவி அவனுக்கு ஏற்ற, நல்லுரைபுகன்று சீரியதுணையாக இருத்தல் வேண்டும். மனைவியின் பேச்சினைக் கேட்கக் கூடாது என்பது இவ்: அதிகாரத்தின் பொருளல்ல. காமமிக்கவனாகி அதன் பொருட்டுப் பெண்ணிற்கு அடிமையாவதையே கூறுகின் றது. கணவன் மனைவியை அடக்கி அடிமையாக வைக்க வேண்டும் என்று பொருள் கொள்ளுவது பொருந்தாக் கூற்றாம். பெண்ணுக்கு ஆண் அடிமையாக இருக்கக் கூடாது. என்பதே இவ்வதிகாரத்தின கருத்தாகும். இன்பம் காரணமாகத் தம் மனையாளை விரும்பி அவள் தன்மையராய் ஒழுகுவார் சிறப்படைய மாட்டார். பொருள் செய்தலை முயல்வதற்கும் இடையூறாகும். இதனை முதற். குறட்பா கூறுகின்றது. தனது ஆண்மையை விட்டும். பெண் மையை விழைவான் எய்திய செல்வம் பெரிய நாணத். தினையும் கொடுக்கும என்று இரண்டாம் குறட்பா கூறு. கின்றது.

  • மனைவிழைவார் பெண் விழைவான்’ என்று. முறையே முதல் இரண்டு குறட்பாக்கள் ஆண் இயல்பு. குன்றியவனைக் குறிததனவாகும். ஆணுக்கும் பெண்ணுககும். இருக்கும் வேறுபாடுகள் பலப்பலவாகும். உடல் அமைப்பு முதற் கொண்டு உள்ளம், எண்ணம் முதலியனவற்றிலும். வேறுபாடுகள் பலவுண்டு. - - இவை இயற்கையால் அமைக்கப்பட்டனவாகும். கற்ப ைன யா ல் கூறப்படுபவையலல. எளிமையாகக் கூறுமிடத்து உடல்பலம் ஆண்களுக்கு இருப்பது போல் பெண்களுக்கு இருப்பதில்லை. இயற்கையின விதியாகும். விதவிவக்குகள் காணப்படுதல் அரிதாகத்தான் இருக்கும்.