பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 இல்லாளைத் தாழ்ந்து அஞ்சி நடப்பவனை நல்லோர் யாவரும் இழிவாகவே எண்ணுவர். அவரிடம் செல்லுங்கால் அவனுக்கு நாணமே உண்டாகும். இதனை தாழ்ந்த இயல்பு இன்மை' என்று மூன்றாம் பாடல் குறிக்கின்றது. மனைவியை அஞ்சி நடப்பவனுக்கு அறம் செய்யும் எண்ணமும் வாராது: வந்தாலும் செயல்படாது; அவனுக் குப் பேரின்பம் என்பதும் கிட்டாது. தொழில் செய்தலும் நடவாது என்றெல்லாம் நான்காம் பாடல் விளக்கம் தரு கிறது. இல்லாளை அஞ்சி அஞ்சி நடப்பவன் எவ்வளவு இழி தன்மையனாகி விடுவான் என்பதனை ஐந்தாம் பாடல் கூறுகின்றது. அவன் தேவர்களைப் போல வாழ்ந்தாலும் ஆண்மையில்லாதவனாகவே கருதப்படுவான். - பெரும் குற்றத்திற்கும் ஆளாவான் பெண் ஏவல்’ செய்பவன் என்று ஏழாம் பாடல்|குறித்துக் காட்டி அப்படிப் பட்டவனைவிட பெண்தன்மை நிறைந்த பெண்ணே பெருமையுடையவன் என்று கூறுகின்றது. பெண் விரும்பிய வாறே ஒழுகுபவன் நற்பணிகளையும் முடிக்கமாட்டான் என்று எட்டாம் பாடல் தெளிவுபடுத்துகிறது. பெண் ஏவல் செய்பவன் இழிநிலையினை ஒன்பதாம் பாடலும் வற்புறுத்திக் காட்டுகிறது, செய்வார்கண் இல்' என்று குறிப்பிட்டிருப்பது சிந்திக்கத்தக்கதாகும். உயர்ந்த எண்ணங்களையும், செயலாற்றும் சிந்தனையும் கொண்ட வர்கள் எக்காலத்திலும் இன்பம் காரணமாக பெண்ணடிமை என்பது போன்ற தன்மையராக இருக்கமாட்டார்கள். மனைவிழைவார் - பேணாது பெண் விழைவான் தாழ்ந்த இயல்பின்மை-மனையாளை அஞ்சும் இல்லாளை அஞ்சுவான்-தோள் அஞ்சுப்வர் பெண் ஏவல் செய் தொழுகும் - பெட்டாங்கு ஒழுகுபவர் - என்று கூறப் அ. வி.-10