பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பட்டனவெல்லாம் ஆண் அடிமையாக இருக்கும் தன்மை மிக்க தவறாகும் என்று விளக்கப்பட்டது. கணவன் மனைவி இருவரும் ஒத்த அன்பும் உள்ளமும் பெற்று வாழ்தல் வேண்டும் என்ற உண்மை தெளிவாக்கப்பட்டது அஞ்சுதல் ஏவல் என்ற இரண்டும் பன்முறை கூறப்பட்டுள்ளன. 92. வரைவின் மகளிர் பொருளுக்காக இன்பத்தினைக் கொடுக்கும் பெண் களைப் பற்றிக் கூறுவதாகும். இன்பத்தினை விலை கொடுப்பாரி யாவரிக்கும் விற்பவர்கள் ஆவார், ஆகாதார், என்ற அளவு - எல்லை . வரைவு - இல்லாத மகளிரது இயல்பினைக் கூறுவதாகும். இவர்களால் வரும் குற்றத் தினைக் கூறுவதாகும் முதன்மூன்று பாக்களும் அத்தகைய பெண்களின் சொல்லும், செயலும் பொய் என்று கூறு கின்றன. நான்கு முதல் ஆறு பாடல்கள் அப்பெண்களை உயர்ந்த பண்பாளர்கள் தீண்ட மாட்டார்கள் என்று கூறி தெளிவு: தருகின்றனவாகும். கடைசி நான்கு பாக்களும் அப்பெண்களைச் சேருவோர் இழிந்தோர் என்று கூறுகின்றன. ஆய்தொடியார் . பண்பு இல்மகளிர் . பொருட் பெண்டிர் - பொருட் பொருளார் - பொது நலத்தார் புன்னலம் பாரிப்பார் . மாயமகளிர் - வரைவு இலா மாணி ழையார் . இருமனப் பெண்டிர் என்று கூறப்பட்ட பத்தும் வரைவின் மகளிரின் இழி குணங்களையும் தன்மையினையும் கூறுகின்றனவாகும். அவர்கள் அன்பினால் நேசிப்பதே இல்லை; பொருள் ஒன்றினையே விரும்புவர். அவர்கள் பேசும் இனிய சொல் குற்றம் தரும் இவைகளை முதற் குறட்பா எடுத்துரைக்கின்றது. ஒருவன் பொருளை அளந்தறிந்து அதை அடையும் வரை அவனுடன் பழகுபவள்