பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15i என்பதை இரண்டாம் குறள் பயன்தூக்கி' என்றுதொடங்கி விளக்கம் தருகிறது. அவர்களைத் தழுவி இன்புறுதல் இருட்டறையில் முன் அறியாத பிணத்தினைத் தழுவுவது போன்றதாகும் என்று மூன்றாம் குறட்பா குறித்துக் காட்டு கிறது. இக்குறட்பா பொய்ம்மை முயக்கம்' என்று குறித் திருப்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகும். சிறந்த அறிவும் அருளும் கொண்ட சிறந்தோர் இத்தகைய பெண்களை விழையமாட்டார் என்று நான்காம் குறட்பா விளக்கம் செய்கிறது. அருட்பொருள் ஆயும் அறிவினவர்-மதி நலத்தின் மாண்ட அறிவினவர்-தந்நலம் பாரிப்பார்-முதலியன வெல்லாம் நல்ல மேலோரிகளைக் குறித்து அப்படிப்பட்ட வர்கள் இத்தகைய மகளிரை நாடமாட்டார்கள் என்று கூறுகின்றன. இத்தகைய மகளிரை நாடுபவர்கள், நிறை நெஞ்சம் இல்லவர்-ஆயும் அறிவினர் அல்லார் புரையிலாப் பூரியர்கள் - திரு நீக்கப்பட்டார் - என்று குறித்து அவர்களை இழிவு படுத்திக் கூறுகின்றன. அப்பெண்களை அணங்கு" என்று கூறுதல் மயக்கம் கொண்டவரிகள் கூற்றாகும். அப் பெண்களை, அளறு என்று கூறியது சிந்தனைக்குரியது. உலக வழக்கில் நரகம் என்று கூறுவர். 93. கள் உண்ணாமை ஒழுக்கத்தினையும், உணர்வினையும், மனிதத்தன்மை யினையும் அழிப்பதாகும். அதனை உண்ணாமையினது சிறப்பு கூறப்பட்டது. கள் குடித்தல் என்பது இயல்பாகக் கூறப்படும்வழக்கமாகும். கள் உண்ணாமை என்று கூறினார். 'பருகாமை" என்பதாக இல்லை. உண்ணாமை என்றதால், தனது மதியினையும், அறிவினையும், உள்ளத்தினையும் ஆக அனைத்தையும் ,கெடுத்து - கள்ளுதல் செய்கின்ற பொருள் அனைத்தையும் குறித்தார் என்று கொள்ளுதல்