பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 கின்ற நிலையினைக் காண மாட்டானா என்று பத்தாம் பாடல் அறிவுறுத்துகின்றது. கள்ளுண்ணாத போது கண்டால் உண்மை உணரும் அறிவு தெளிவுபடுத்தும் என்பது புலப்படுத்தப்பட்டது. 94. குது அறம் பொருள் இன்பங்கட்குப் புறம்பானதும் வாழ் வினைக் கெடுப்பதுமாகியசூதின் இயல்பினைக் கூறுதலாகும். முதல் ஐந்து பாடல்களும் வறுமை உண்டாக்குவதற்குக் காரணமாக இருப்பது சூது என்று விளக்குகின்றன ஆறு முதல் ஒன்பது பாடல்கள் சிறுமைபல செய்து சீரழிப்பது குதுதான் என்று கூறுகின்றன. சூதினை ஒழிப்பது எளிதான தல்ல வென்பதும், ஒழிந்தாரது பெருமையும் பத்தாம் பாடலால் கூறப்படுகின்றன. மீன் பிடிக்கும் தொழிலினைக் காட்டி சூதாட்டத்தின் தீமையினை முதற் குறட்பா தெளிவுபடுத்துகிறது. வெற்றி வருவது போலிருந்து அழிவினைத் தருவது சூதாட்டமாகும். என்றும் குறித்துக் காட்டுகிறது முதற்குறட்பா. இர்ையால் மறைந்த தூண்டிலிருந்த இரும்பின்ன மீன் விழுங்கியது போல சூதாட்டமும் ஆகும். இரண்டாம் குறட்பா சூதாடு பவர்களுக்கு நல்ல வாழ்வே இருக்காது என்று கூறுகிறது. 'நன்று எய்தி வாழ்வதோர் ஆறு' என்று இரண்டாம் பாடல் முடிவது குறிப்பிடத்தக்கதாகும். சூதாட்டமே வேலையாக இருப்போரும் உண்டு. அப்படிப்பட்டவர்கள் ஈட்டிய பொருளும், பொருள் வருவா யும், அவனை விட்டுப் போவது உறுதி என்பதனை மூன்றாம் பாடல் தெளிவுபடுத்துகிறது. சூதினைவிட வறுமை தருவது வேறு எதுவுமே இல்லையாகும் என்று நான்காம் பாடல் எடுத்துக்காட்டி, வறுமை தருவது ஒன்றுஇல் என்று முடி