பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 கிறது. இக்குறட்பா சிறுமை பல செய்து சீரழிக்கும்' என்று குறிப்பிட்டிருப்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகும். முன் பெல்லாம் சூதாட்டத்தினையே இடமாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் ஒன்றுமே இல்லாதவராகிப் போனாtகள் என்று ஐந்தாம் பாடல் கூறுகின்றது. சூது என்னும் மு 4 டி ய ர ல், மூடப்பட்டவர்கள் எப்போதும் துன்பத்திலேயே இருப்பார்கள்: வயிறார உண்ணவும் மாட்டார்; இதனை ஆறாம் குறட்பா எடுத்துக் காட்டுகிறது. முகடி" என்பது உலக வழக்கில் மூதேவி என்று கூறப்படுவதாகும். சூதாடும் களத்திற்குச் செல்லு கின்ற பழக்கம் கொண்டவனுடைய செல்வமும் போகும் . அவனுடைய பண்பும் கெட்டுவிடும் என்று ஏழாம் குறட்பா எடுத்துரைக்கின்றது. கழகத்துக் காலை புகின்' என்று கூறி ஆறாம் குறட்பா கெடுதியினைச் சுட்டிக் காட்டுகிறது. பொருளையும் கெடுத்து, பொய்ம்மையினையும் மேற் கொள்ளச் செய்து மனதில் அருளையும் கெடுத்து, துன்பங் கள் பலவற்றைபும் உன்டாக்குவது சூது என்று எட்டாம் பாடல் விளக்குகின்றது. சூதாடுகிறவனை விட்டு நீங்குகின்ற ஐந்தினையும் ஒன்பதாம் பாடல் கூறுகின்றது. உடுக்கும் உடைக்குக்கூட அல்லல்படும் நிலைமை அவனுக்கு வந்தே தீரும், உணவுக்கும் துன்பப்படுவான். ஒன்பதாம் பாடல் கூறும் ஐந்தும் இன்றியமையாதனவாகும். 95. மருந்து பழவினை யென்னும் இயற்கையினாலும், வேறு காரணங்களினாலும் மக்கட்கு வாதம் முதலிய பிணிகள் வருவதுண்டு. பழவினையால் வருவன தீராத நோயாக இருத்தலும் உண்டு. எனவே தீர்க்கப்படும் நோயனைத் திற்கும் வழிவகையினைப் பொதுப்படக் கூறுகின்றனர்.