பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15? 96. ത്രാ அதாவது உயர்ந்த குடியின்கண் பிறந்தாரது தன்மை களைக் கூறுவதாகும். உயர்ந்த குடிப்பிறப்பு என்பது கல்வி யறிவிலும், செல்வாக்கிலும், ஒழுக்க முறைகளிலும் மேலான வர்களிள் குடும்பம் என்று பொருள்படுவதாகும். நாணுடைமை - ஒழுக்கமுடைமை . வாய்மை . ஈகை - இனியவை கூறல் - பண்புடைமை முதலிய அதிகாரங் களைக் குறிப்பனவெல்லாம் இவ் அதிகாரத்தில் காணப்படு கின்றன. முதல் மூன்று குறட்பாக்களும், உயர்ந்த குடியில் பிறந்தாரது இயல்பினைக் கூறுகின்றன. நான்கு, ஐந்து, ஆறு ஆகிய மூன்று பாடல்களும் உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் வறுமையுற்ற காலத்திலும் தம்முடைய தன்மையில் வேறுபட மாட்டார்கள் என்பதனைக் கூறுகின்றன. நற்குடியில் பிறந்தவர்களிடம் குற்றம் காணப்பட்டால் அதனால் உண்டாவதை ஏழு எட்டு ஆகிய இரண்டு பாடல் களும் கூறுகின்றன. கடைசி இரண்டு பாடல்களும் குடிமைக்கும், நற்குடியில் பிறந்தவர்களிடம் காணப்படும் குண நலங்களையும் கூறுகின்றனவாகும். ந ற் கு டி யி ல் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே இருக்கும் குணங்களை முதற்குறட்பா கூறுகின்றது. செம்மை, நாணம், ஒழுக்கம், வாய்மை, நகை, ஈகை இன்சொல், இகழாமை ஆகிய நற்பண்புகளெல்லாம் நற்குடி யில் பிறந்தார் மாட்டு இருக்கும் என்று முதல் மூன்று குறட் பாக்களும் குறித்துக் காட்டுகின்றன. குன்றுவ செய்தல் இலர்' என்று முடிகின்ற நான்காம் குறட்பா நற்குடியில் பிறந்தவர்கள் பொருளுக்காக வேண்டி இழி செயல்களைச் செய்ய மாட்டார்கள் என்று கூறுகின்றது. 'பழங்குடியண்பில் தலைப்பிரிதல் இன்று' என்று கூறும் ஐந்தாம் பாடலும்,'மாசற்ற குலம் பற்றி வாழ்தும் என்புார்"