பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 1 நான்காம் பாடல் அப்பெருமை உண்டாகும் வழியினைச் சுட்டிக் காட்டுகிறது. அப்பெருமையினை உடையார் செய்யும் செயல் ஐந் தாம் பாடலால் குறிக்கப்பட்டது. ஆறு இழு பாடல்கள் பெருமையில்லாதவர்களைப் பற்றிக் கூறுகின்றன. கடைசி மூன்று பாடல்களும் பெருமையுடையவர்களைப் பற்றியும் அது இல்லாதவர்களைப் பற்றியும் கூறுகின்றன. ஒருவனுக்குப் பெருமை என்பது என்னவென்றால் செயற்கரிய செய்வோம் என்கின்ற ஊக்கமிகுதியேயாகும்: ஒருவனுக்கு மாசு என்கின்ற குற்றம் யாதென்றால், அப்படிப் பட்ட செயலை நீக்கி வாழ்வோம் என்று கருதுதலாகும். இதனை முதற் குறட்பா விளக்குகின்றது. "வெறுக்கை" யென்பது பெருமையினைக் குறித்ததாகும். மக்களுயிர்க்கெல்லாம், பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்கும் என்றுஇரண்டாம் குறட்பா கூறுகின்றது. அவ்வாறு ஒத்திருக்கும் என்றாலும், சிறப்பியல்புகள் ஒத்திராது. ஏனெனில் அவைகள் செய்யும் தொழில்களால் வேறுபட்டன வாகும். வேறுபாடு, நல்லன தீயன செய்பவைகளால் உண்டாவதாகும். 'பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் என்று தொடங்கப் பெறுகின்ற குறட்பாவும் பிறவும் சிந்திக்கத் தக்கனவாகும். கற்பு நிறைந்த பெண்ணின் மன உறுதிப்பாடு எத்தகைமையானதோ அதுபோல் ஒருவன் தன்னை ஒழுக்கத்தினின்றும் வழுவாமல் காத்துக் கொள்ளுவானே யானால் அவனுக்குப் பெருமையுண்டு என்று நான்காம் பாடல் தெளிவுபடுத்துகிறது, ஏழாம் பாடல் சிறப்பு யாரிடம் அமைந்திருத்தல் வேண்டும் என்று கூறுகிறது. பெருமையுடையவர்களிடத் தில், உயர்வு உயர்ச்சி என்கின்ற சிறப்பு அமைந்திருந்தால் அது பலருக்கும் நன்மையாக முடியும் அப்படி இல்லாமல்