பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 * * 6: வகையால் கூறுகின்றன. கடைசி மூன்று குறட்பாக்களும் அவற்றால் நிறைந்தவரது சிறப்பினை எடுத்துக் காட்டு கின்றனவாகும். ஒப்புரவறிதல், ஈகை, அன்புடைமை, நாணுடைமை, கண்ணோட்டம், வாய்மை, கொல்லாமை, படை, இன்னா செய்யாமை, முதலிய அதிகாரங்களைப் பற்றிய கருத்துக் குறிப்புகள் இவ்வதிகாரக் குறட்பாக்களில் காணப்படு இன்றன. நமக்குத் தகுவது இது என்று சான்றாண்மையினை மேற்கொண்டு ஒழுகுவார்க்கு நல்லனவாய குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்குமென்று முதல் குறட்பா கூறு கின்றது. கடன் என்ப நல்லவையெல்லாம்" என்று தொடங்கப் பெறுகின்ற முதற் குறட்பா சிறப்புற அமைந்துள்ளதாகும். குண நலம் சான்றோர் நலனே' என்று இரண்டாம் குறட்பா குறித்துக்காட்டி, எல்லா நற்குணங்களும் நிறைந்தவர்களே சான்றோர்கள் என்று குறிப்பிடுகின்றது. மூன்றாம் குறட்பா, ஐந்து சால்பு ஊன்றியது.ாண்’ என்று முடி கின்றது. இந்த ஐந்து பண்புகளுக்கும் தனித்தனி ஆதிகாரங்கள் இருக்கின்றன என்று அறிதல் வேண்டும். "பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு என்று முடி கின்ற நான்காம் குறட்பா, சான்றோர்களின் அரிய தன்மை களில் ஒன்றினைக் காட்டுகிறது. சான்றோர்கள் பகைமை யினையும் ஒறுப்பர் என்று ஐந்தாம் குறட்பா எடுத்துக் காட்டுகிறது. தமக்கு உயர்ந்தார் மாட்டுக் கொள்ளும் தோல்வியினை இழிந்தார் மாட்டும் கொள்ளத் தயங்காத வர்கள் சான்றோர்கள் ஆவார்கள், என்று ஆறாம் பாடல் விளக்கம் தருகின்றது. இன்னா செய்தார்க்கும் இனியவைகளையே செய்தல், சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெற்றிருத்தல், ஊழி பெயரினும் தான் பெயராதிருத்தல்-ஆன குணங்களெல்