பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 லாம், சால்புடையவர்களிடத்தில் உள்ளனவென்று முறையே, ஏழு, எட்டு, ஒன்பதாம் பாடல்கள் கூறுவன வாகும். சான்றோர்கள் பல குணங்களையும் தாங்கும் தன்மையிலிருந்து குறைந்து விடுவார்களாயின், இந்தப் பூமி யும் தனது பாரத்தினைத் தாங்காததாய் முடியும். சான்றோர்கள் பல கு ண ங் க ைள யு ம் தாங்கிக் கொண்டிருப்பது அவர்களுக்கு இயல்பேயாகும் என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது. பூமி அனைத்தையும் தாங்குவது இயல்பு என்பது குறிப்பாகும். வாழ்க்கைத் துணை நலம்' என்ற அதிகாரத்தில், ‘கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின்' என்று கூறியது போலவே, இந்த அதிகாரத்தில், எட்டாம் குறட்பாவிலும் அவ்வாறே கூறினார். சால்பு' 'கற்பு’ என்பன ஒரே தன்மையனவாம். 100. பண்பு உடைமை பெருமை, சான்றாண்மை முதலிய அதிகாரங்களில் கூறப்பட்டவைகளை உணர்ந்து அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுதலாகும். யாவரும் காணுதற்கு எளிய வராகிப் பழகுதல், அரிதான பண்புடைமை என்னும் நன்னெறியினை அடைவதற்கு எளிதான வழியாகும் என்று முதற் குறட்பா விளக்கமும் தெளிவும் தருகின்றது. எண்பதத் தால் எய்தல் எளிது என்று முதற் குறட்பா அரிய குறிப்பினைத் தருவது சிந்திக்கத் தக்கதாகும். - - உலகத்தோடு அமைந்த நற்குடி யில் பிறந்திருப்பதும் யாவரிடத்தும் அன்புடையவர்ளைாக இ ரு ப் ப து ம் பண்புடைமை என்னும் நன்னெறியாகுமென்று இரண்டாம் குறட்பா விளக்குகிறது. முதலிரண்டு குறட்பாக்களும் பண்பு உடையார் ஆவதற்குக் காரணங்களைக் கூறுகின்றன. மூன்று முதல் ஆறாம்பாடல் வரை பண்புடையாரது உயர்ச்சி கூறப் பட்டது