பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 கிறது. பண்பு இல்லாததால், ஒருவரோடும் கலந்து உள்ளம் மகிழமாட்டாதவர்களுக்கு, மிகவும் பெரிய இந்த உலகம், இருளில்லாத பகற்பொழுதிலும், இருளிலேயே கிடந்ததா கும் என்பதனை ஒன்பதாம் பாடல் நன்கு உணர்த்துகிறது. நல்ல பசும்பால் அது வைக்கப்பட்ட பாத்திரத்தினால் கெட்டது போன்றதாகும் என்ற உவமையினைக் காட்டி ஆரிய கருத்தினைப் பத்தாம் பாடல் அறிவுறுத்துகிறது. பண்பில்லாதவனிடத்தில் உள்ள செல்வம் அந்த ஆவின் பால் போலாயிற்று என்று கூறப்பட்டது. 101. நன்றியில் செல்வம் ஈட்டியவர்க்கும், பிறர்க்கும் பயன்படாத செல்வத்தினது இயல்பினைக் கூறுவதாகும். செல்வத்தினையுடையவனது குற்றம், செல்வத்தின் மேல் ஏற்றப்பட்டது அப்படிப்பட்டவ னிடம் இருக்கின்ற செல்வம் பயன்படாமல் போவதோடு தீமையினையும் உண்டாக்குவதாகும். முதற்குறட்பா, அத்தகைய செல்வம், ஈட்டியவனுக்கும் பயன்படாது என்பதனைக் கூறுகின்றது. இரண்டு, மூன்று, நான்கு பாடல்கள் அச்செல்வம் பிறர்க்குப் பயன்படாது என்பதனைக் கூறுகின்றது. ஐந்து, ஆறு ஆகிய இருபாடல் களும் மேற்கூறிய இரண்டு வகையிலும் பயன்படாத தன்மை யினைக் குறிக்கின்றன. கடைசி நான்கு பாக்களும் நன்றியில் செல்வத்தினுடைய குற்றத்தினை விளக்கம் செய்கின்றது. வாய்சான்ற பெரும் பொருள் என்று முதற்குறட்பா குறித்துக் காட்டுகிறது. நிறைய செல்வம் இருக்கின்றது என்பதாகும், அவனோ, கஞ்சத்தனம் கொண்ட உலோபி, அவனும் உண்ணான் அனுபவிக்கவில்லை. பிறகுசெத்தான். அந்தச் செல்வத்தினைப் பயன்படுத்தும் உரிமையின்றியே செத்தான்.