பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 இதனை முதற்பாடல் தெள்ளத் தெளிய எடுத்துரைக் கின்றது. நாணம் என்பதனுடைய இலக்கணம் முதற்பாடலால் எடுத்துக்காட்டப்பட்டது. நாணத்தினது சிறப்பினை, இரண்டுமுதல் நான்காம் பாடல்கள் வரை கூறுகின்றன. ஐந்தாம் பாடல் அவர்களுடைய சிறப்பினைக் கூறுகின்றது. ஆறு, ஏழு பாடல்கள் நாணம் உடையவர்களுடைய செயல் எப்படி இருக்கும் என்று விளக்குகின்றன. எட்டு முதல் பத்தாம் பாடல் வரை, நாணம் இல்லாதாரது இழி நிலை எடுத்துக்காட்டப்பட்டதாகும். மாந்தரிக்கு அமைந்துள்ள தனிச்சிறப்பு என்னவென் பதை இரண்டாம் பாடல் குறிக்கின்றது. இக்கருத்தினை: "நாண் உடைமை மாந்தர் சிறப்பு: என்று குறித்துக் காட்டு கிறது. ஊன், உடை என்பன போன்றவைகள் எல்லாம் எல்லா உயிர்களுக்கும் வெவ்வேறாக இல்லை என்பதையும் இக் குறட்பா உணர்த்துகின்றது. பிற உயிர்கள் உ ட ம் பி ைன நிலைக்களனாகக் கொண்டிருக்கும். ஆனால் மக்களுக்கோ, சான்றாண்மை என்னும் நன்மை, நாணம் என்பதனை நிலைக்களனாகக் கொண்டிருப்பதாகும் என்று மூன்றாம் குறட்பா விளக்கம் செய்கிறது. கருமத்தால் நாணுதல்-நாணுடைமை மாந்தர் சிறப்பு. நன்மை குறித்தது சால்பு உறைபதி என்னும் உலகு-அணி யன்றோ நாணுடைமை-நாண் வேவி.நாணால் உயிரைத் துறப்பர்-என்று குறிப்பிட்டனவெல்லாம் நாணுடைமையின் சிறப்பினையும் அதனைக் கொண்ட மக்களின் பெருமை யினையும் எடுத்துக் காட்டுவனவாகும். நாணம் இல்லாத வர்கள் உலகில் வாழ்வது, மரப்பாவை ஆடுவது போன்ற தாகும் என்று பத்தாம் பாடல் கூறி நாணம் இல்லாதாரது இழி தன்ழையினை எடுத்துக் கூறுகிறது,