பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 நாணம் இல்லாதவர்களை, அறமே தண்டிக்கும் என்று எட்டாம் பாடல் கூறுவதும், நலம் சுடும் நாணின்மை நின்றக்கடை" என்று ஒன்பதாம் பாடல் கூறுவதும் நாணம் அற்றவர்களின் தாழ்ந்த இயல்பினை எடுத்துரைத்தன வாகும். நாணத்தினையே வேலியாகக் கொண்டு உயர்த் தோர் வாழ்வார்கள் என்று ஆறாம் பாடல் மிகவும் சிறப் பாகக் கூறுகின்றது. ஒன்பதாம் பாடல் நலம்’ என்று கூறியது, பிறப்பு, கல்வி, குணம், செயல், இனம் என்ற அனைத்தையும் குறித்தவையாகும். பத்தாம் பாடலில், 'இயக்கம்' என்று குறிப்பிட்டது பன்முறையும் சிந்திக்கத் தக்க உண்மையினைக் கொண்டதாகும். 103. குடி செயல்வகை ஒருவன் தான் பிறந்த குடியினை உயரச் செய்தல் என்தட னைக் கூறுவதாகும். குடி என்பது தனது குடும்பத் தினை மட்டும் குறிப்பதாகும் என்பதல்ல. தன்னைச் சார்ந்த வகையினர் என்ற பரந்த எண்ணத்தில் கூறப்பட்டதாகக் கொள்ளுதல் வேண்டும். குறிப்பிட்ட சிறு எண்ணிக்கை யுள்ளவர்களை உயர்த்துதல் என்று மட்டும் குடி செயல் வகை கூறவில்லை. குடிமக்கள் என்று குறிப்பிட்டதால் பலருக்கும் பயன்படுபவனாக இருக்கவேண்டும் என்ப தனையே குறித்தார். அவனுக்குப் புகழ் உண்டாவதும் அதனாலேயே வரும் என்றறிதல் வேண்டும். முதலிரண்டு பாடல்களும் அதனைச் செய்வதற்குக் காரணத்தினைக் கூறுகின்றன. மூன்று நான்கு பாடல்கள் அவனுக்குத் தெய்வம் துணையாகவரும் என்று கூறுகின்றது. தெய்வம் என்று கூறியதால் இயற்கையும் அவனுக்குத் துணை செய்யும் என்பதாயிற்று.