பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 ஐந்து, ஆறு, ஏழு பாடல்கள் குடியை உயரச் செய்பவன் அடையும் சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றன. குடி உயரச் செய்பவனுடைய இயல்பினை எட்டு, ஒன்பதாம் பாடல்கள் கூறுகின்றன. பத்தாம் பாடல் ,குடி உயரச் செய்யும் நல்லாள் இல்லாத குடிக்கு வருகின்ற குற்றத்தினை விளக்குகின்றது. பெருமையின் பீடுடையதுஇல்-நீள்வினையால் நீளும் குடி-தெய்வம் மடிதற்றுத்தான் முந்துறும் . சூழாமல்தானே முடிவெய்தும்.என்று குறிக்கப்பட்டனவெல்லாம் குடி உயரக் கூடிய சிறப்பினையும் குடி செய்வானின் உயர்ச்சினையும் கூறுகின்றனவாகும். முதற் குறட்பா கைதுவேன்' என்று குறிப்பிட்டிருப்பது சிந்திக்கத் தக்கதாகும். கைவிடேன்" என்பது பொருளாகும். பீேடுடையது இல் என்று கூறிப் பெருமை கூறப்பட்டது. குடிமக்களுக்கு உழைப்பதே பெருமையும் புகழும் தருவ தாகும் என்று முதல் குறட்பா விளக்கம் தருகின்றது. இரண்டாம் குறட்பா அவனுக்கு இருக்க வேண்டிய இரண்டு பண்பாடுகளைச் சுட்டிக்காட்டுகிறது. மூன்றாம் குறட்பா ஆழ்ந்த பொருளினை எடுத்துரைக்கின்றது. குடி உயரச் செய்பவனுக்குத் தெய்வமும் தானே வந்து பேருதவி புரியும் என்று வற்புறுத்திக் காட்டுகிறது. தெய்வம்" என்ற சொல்லின் விளக்கங்களைப் பிற இடங்களில் கண்டு தெளிக. தெய்வத்தினை உருவகப் படுத்தி மடிதட்டிக் கொண்டு வரும் என்று கூறியது குடி மக்களுக்கு உழைத்தல் வேண்டும் என்ற சிறப்பினை மேம் படுத்தியதேயாகும். . . நாண் என்னும் நல்லாள்.நிலம் என்னும் நல்லாள் என்பன போன்றவைகளைச் சிந்திக்கவும். தம் குடி குடிக்கான செயல்களை விரைந்து முயன்று செய்பவர் களுக்கு அச் செயல்களை முடிக்கும் திறம் அவர் தேடி